தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ உடுப்பி சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயம்

உடுப்பி சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயம்

உடுப்பி சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயம்


ADDED : ஜூலை 10, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொகா மாவட்டம், ஆகும்பேயில் இருந்து 21 கி.மீ., தொலைவிலும்; உடுப்பி மாவட்டத்தில் இருந்து 47 கி.மீ., தொலைவிலும் சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயம் அமைந்து உள்ளது.

கடந்த 1974ல் 88.40 சதுர கி.மீ., பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த சரணலாயம், 2011ல் பாளேஹள்ளி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, ஆகும்பே வனப்பகுதி, சோமேஸ்வரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, தொம்பட்லு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் இணைந்து 314.25 சதுர கி.மீ., பரப்பளவாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், இதனை சுற்றி உள்ள மூகாம்பிகை வனவிலங்கு சரணலாயம், சராவதி வனவிலங்கு சரணாலயம், குத்ரேமுக் தேசிய பூங்கா ஆகியவற்றையும் பாதுகாப்பான பகுதியாக உருவாக்கி உள்ளது.

சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்திற்குள் சோமேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளதால், இப்பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சரணாலயத்தின் வழியாக சீதாநதி செல்கிறது.

இந்த சரணாலயத்தில் குரைக்கும் மான், லங்கூர், காட்டெருமை, நரி, சிறுத்தை, சிங்கவால் குரங்கு, கடமான், புள்ளிமான், புலி, காட்டு நாய், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளும்; சிலான் பிராக்மவுத், மலபார் பீய்டு ஹார்ன்பில், மலபார் ட்ரோகான், மலபார் விஸ்லிங் த்ரஸ் போன்ற பறவைகளும் உள்ளன.

மலைப்பாம்புகள், மானிட்டர் பல்லிகள், ராஜநாகம் போன்ற ஊர்வன இனங்களும் ஏராளமாக உள்ளன.

அத்துடன் பட்டாம்பூச்சி பிரியர்களின் சொர்க்கமாகவும் இது உள்ளது.

சரணாலயத்தில் மலையேற்றம் செய்ய விரும்புவோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். இதன் அருகில் இளைஞர்கள், குழந்தைகள் தங்கி மகிழ்வதற்காக, மாநில அரசின் சீதாநதி முகாம் உள்ளது. அத்துடன் பெருக்கெடுத்து ஓடும் நதியில் ரப்பர் படகில் செய்யும் நீர்சாகச விளையாட்டும் உள்ளது.

தினமும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை சரணாலயம் திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 200 ரூபாயும்; குழந்தைகளுக்கு 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நவம்பர் முதல் ஏப்ரல் மாதங்களில் இங்கு செல்வது சிறந்தது. வீடியோ கேமரா, ஸ்டில் கேமரா கொண்டு செல்ல கட்டணம் எதுவும் இல்லை.

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 112 கி.மீ., தொலைவில் உள்ள சரணாலயத்துக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.

உடுப்பி, ஷிவமொக்கா மாவட்டங்கள் இடையே சரணாலயம் அமைந்து உள்ளதால், ரயிலில் செல்வோர், உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள சரணாலயத்திற்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.

பஸ்சில் செல்வோரும், ஷிமொக்காவின் ஆகும்பே பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள சரணாலயத்திற்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.

எப்படி செல்வது?



- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us