/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்டார்ட்அப்கள்
/
பெருநகரங்களுக்கு இணையாக நிதியை குவிக்கும் 2ம் கட்ட நகர ஸ்டார்ட்அப்கள்!
/
பெருநகரங்களுக்கு இணையாக நிதியை குவிக்கும் 2ம் கட்ட நகர ஸ்டார்ட்அப்கள்!
பெருநகரங்களுக்கு இணையாக நிதியை குவிக்கும் 2ம் கட்ட நகர ஸ்டார்ட்அப்கள்!
பெருநகரங்களுக்கு இணையாக நிதியை குவிக்கும் 2ம் கட்ட நகர ஸ்டார்ட்அப்கள்!
UPDATED : ஆக 27, 2023 08:43 PM
ADDED : ஆக 27, 2023 06:17 PM

சர்வதேச பொருளாதார மந்தநிலையால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், பெரிய நிறுவனங்களுக்கு இணையாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருக்கும் ஸ்டார்ட்அப்களும் அதே சராசரி அளவு நிதியை திரட்டியுள்ளன.
2023ன் முதல் அரையாண்டில் சிறு நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப்கள் திரட்டிய நிதி ரூ.1,952 கோடி. இதில் சராசரி டீல் மதிப்பு ரூ.42 கோடி. பெரிய நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப்கள் பெற்ற சராசரி டீல் மதிப்பு ரூ.43 கோடி. இருப்பினும் அதிக ஒப்பந்தங்களை பெருநகர நிறுவனங்களே கைப்பற்றியுள்ளன. அதற்கு காரணம் அதிக நிறுவனங்கள் டில்லி, நொய்டா, பெங்களூரு, ஐதராபாத், சென்னை போன்ற நகரங்களில் துவங்கப்படுவது தான். ஆனால் இரண்டாம் கட்ட நகரங்களிலில் இருந்து யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாக வரும் காலங்களில் வாய்ப்பு உள்ளது.
![]() |
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருநகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப்கள் 7,511 ஒப்பந்தங்கள் மூலம் நிதி திரட்டியிருக்கின்றன. 2 மற்றும் 3ம் கட்ட நகரங்கள் 897 ஒப்பந்தங்களை மட்டுமே பெற முடிந்தது.
கோவிட்டிற்கு பிந்தைய 2021 ஸ்டார்ட்அப்களுக்கு சிறப்பான ஆண்டாக இருந்தது. 1,178 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.87 ஆயிரம் கோடி நிதி வந்தன. பின்னர் ரஷ்யா - உக்ரைன் போர், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, டாலர் மதிப்பு ஏற்றம் போன்றவற்றால் முதலீடுகள் முடங்கின. இதனால் 2023ன் முதல் அரையாண்டில் 358 ஒப்பந்தங்கள் மூலம் ரூ14,911 கோடி மட்டுமே கிடைத்துள்ளன.
சிறிய நகரங்களில் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிக்க, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவு பெற்ற மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா எனும் அமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்ப ஆய்வகங்களை உருவாக்கியுள்ளது. வரும் மாதங்களில் பழையபடி முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.