sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறிந்துகொள்வோம்

/

ஸ்பெயினில் 6 ஆயிரம் ஆண்டு பழமையான காலணிகள் கண்டுபிடிப்பு..!

/

ஸ்பெயினில் 6 ஆயிரம் ஆண்டு பழமையான காலணிகள் கண்டுபிடிப்பு..!

ஸ்பெயினில் 6 ஆயிரம் ஆண்டு பழமையான காலணிகள் கண்டுபிடிப்பு..!

ஸ்பெயினில் 6 ஆயிரம் ஆண்டு பழமையான காலணிகள் கண்டுபிடிப்பு..!


UPDATED : அக் 01, 2023 01:10 PM

ADDED : அக் 01, 2023 01:04 PM

Google News

UPDATED : அக் 01, 2023 01:10 PM ADDED : அக் 01, 2023 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்பெயியின் உள்ள குகையில் இருந்து, சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான ஒரு ஜோடி காலணியை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் உள்ள அண்டலூசியாவில் வவ்வால் வசிக்கும் பழைய குகையில், புல்லில் தயாரான காலணி ஜோடியை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனை பகுப்பாய்வு செய்ததில் , காலணி 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என

தெரியவந்துள்ளது.

குகையை, முதன்முதலில் 1831ம் ஆண்டில் வவ்வால் எச்சங்களை உரமாக பயன்படுத்தி கொள்ள நில உரிமையாளர் தோண்டியுள்ளார். பின்னர் 1857ம் ஆண்டில் ஒரு சுரங்க நிறுவனத்தால், அடையாளம் காணப்படும் வரை, ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் பட்டியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

19ம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்கள் குகையைத் தோண்டத் தொடங்கியபோது,

பகுதியளவு மம்மியின் சடலங்கள், காட்டுப்பன்றி பற்கள் மற்றும் தனித்துவமான தங்க

கிரீடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுப்பை கண்டுபிடித்தனர். மீதமுள்ள 76

கலைப்பொருட்கள், தற்போது ஸ்பெயினில் உள்ள ஆய்வாளர்களால் பகுப்பாய்வு

செய்யப்பட்டன.

Image 1177298


ஸ்பெயின் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதிய கற்காலத்தை சேர்ந்த காலணிகள், ஐபீரிய தீபகற்பத்திலும் ஐரோப்பாவிலும் வரலாற்றுக்கு முந்தைய காலணிகளின் துவக்க மற்றும் பரந்த அளவிலான தொகுப்பை குறிக்கிறது. குகைகளில் குறைந்த ஈரப்பதம் இருப்பதால் அவை நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளன.

காலணி தயாரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களின் திறமையை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது. இதுவரை அறியப்பட்ட தெற்கு ஐரோப்பாவில் மிகவும் பழமையான மற்றும் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட தாவர இழை பொருட்கள் இதுவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us