/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
வீடு வாங்க திட்டமிட்டு தயாராவது எப்படி?
/
வீடு வாங்க திட்டமிட்டு தயாராவது எப்படி?
UPDATED : செப் 28, 2023 12:32 PM
ADDED : செப் 28, 2023 12:26 PM

இந்தியாவை பொறுத்தவரை, சொந்த வீடு வாங்க வேண்டும் என இன்றைக்கும் பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். வீடு வாங்க திட்டமிடுவோர், முன்னதாக சுய
திட்டமிடலில் என்னென்ன நினைவில் கொள்ள வேண்டுமென்பதை பார்ப்போம்.
1.முன்பணம் :
நீங்கள் வாங்க திட்டமிடும் வீட்டின் மொத்த மதிப்பில், குறைந்தபட்சம் 30 சதவீதம்
முன்பணமாக கையில் இருக்க வேண்டும். 30 சதவீதம் தொகை ரொக்கமாக வைத்திருந்தீர் எனில் வீடு வாங்கும் போது எழும் மற்ற செலவுகளை எளிதாக சமாளிக்க இயலும்.
2.குறைந்த வட்டி விகிதம் :
அடுத்ததாக, வீட்டுக்கடன் பெறுவதற்கான தகுதிகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கடன் எடுக்கும் போது, எந்தளவு குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்குமென பார்க்க வேண்டும். குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெற என்ன செய்ய வேண்டுமெனில், கிரெடிட் ஸ்கோர் குறைந்தபட்சம் 750க்கு மேல் இருக்க வேண்டும்.
![]() |
3.நீண்ட கால முதலீட்டுக்கு தயாரா:
வீடு வாங்குவது என்பது நீண்ட கால பொறுப்பு என்பதை மனதில் கொள்ள வேண்டும். வீட்டின் உரிமையாளராக இருக்க, நிதி மற்றும் உணர்ச்சிகளை முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும். இது குறுகிய கால முதலீடுக்கு நேர் எதிரானது. நிதி சார்ந்த கணக்குகள், நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றது.
![]() |
4.விரும்பும் இடத்தில் வீடு கிடைத்துள்ளதா?
வீடு வாங்கும் போது, உங்களது லைப்ஸ்டைல் மற்றும் நிதி சார்ந்த இலக்குகளுக்கு சரியான இடத்தை கண்டறிய வேண்டும். மிக சரியான இடம் கிடைப்பது கடினமாகும் பட்சத்தில், வீடு வாங்க வேண்டுமென்ற இலக்கே போதுமானது.
5.சட்டரீதியான விவரங்களை சரிபாருங்கள் :
நீங்கள் வாங்கும் வீடு, மனை தொடர்பான அனைத்து ஆவணங்களும் சட்டப்படி சரியாக இருக்கின்றதா, வேறு ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். சொத்து சார்ந்த ஆவணங்களை வழக்கறிஞரிடம் அளித்து , உரிய ஆலோசனை பெறுவது கூடுதல் செலவாகினும், மன அமைதிக்கு வழிவகுக்கும்.