/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
விநாயகரின் மூஞ்சூறு வாகனமாகிய அசுரனின் கதை..!
/
விநாயகரின் மூஞ்சூறு வாகனமாகிய அசுரனின் கதை..!
UPDATED : செப் 19, 2023 07:36 AM
ADDED : செப் 18, 2023 06:12 PM

சிவபெருமானின் மனைவி பார்வதிக்கு காவலாக இருந்த நந்திதேவர், சிவனுக்கு அதிக விசுவாசமாக இருந்தார். எனவே பார்வதிக்கு அழகான பிள்ளை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. தனக்காக ஒரு பிள்ளையை தனது உடலில் உள்ள மஞ்சளை எடுத்து பிடித்துவைத்து உருவாக்கி உயிர் கொடுத்தார் பார்வதி. பிள்ளையை காவலுக்கு வைத்துவிட்டு நீராடச் சென்றார் பார்வதி. அந்த பிள்ளை சிவனையே வீட்டிற்கு வரவிடாமல் தடுக்கவே, கோபம் கொண்ட சிவன் அந்த பிள்ளையின் தலையை தனது சூலாயுதத்தால் வெட்டி சாய்த்தார்.
மகனின் தலை வெட்டப்பட்டது கண்டு கலங்கிய பார்வதி பிள்ளையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று கணவரிடம் கேட்டார். சிவபெருமான் ஆணைப்படி தேவர்கள் வட திசை நோக்கிச் சென்றனர். அங்கே முதலில் தென்பட்டது ஓர் யானை. அதன் தலையை வெட்டி எடுத்து தலையில்லாமல் இருந்த குழந்தையின் தலையோடு ஒட்டவைத்தனர்.
குழந்தை விநாயகர் அவதரித்தார்.
![]() |
விநாயகரை அசுரன் கஜமுகாசுரனை வதம் செய்ய அனுப்பி வைத்தார் சிவபெருமான். விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. விநாயகர் தமது அம்புகளால் கஜமுகனின் படைகள், தேர், ஆயுதங்களை நொடியில் அழித்தார். ஆனால் அவரது ஆயுதங்களினால் அந்த அரக்கனைக் கொல்ல முடியவில்லை.
![]() |
அரக்கன் ஒரு சிறு மூஞ்சூறாக மாறி விநாயகரைக் கொல்ல ஓடிவந்தான். உடனே விநாயகர் தனது ஞான திருஷ்டி மூலமாக அவனை நோக்கினார். மெய்ஞானம் பெற்ற அந்த மூஞ்சூறு, விநாயகர் பாதங்களில் விழுந்து வணங்கியது. விநாயகர் அதையே தமது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இவ்வாறாகவே மூஞ்சூறு விநாயகரின் வாகனமாகியது.