PUBLISHED ON : செப் 14, 2025

ஆசிரியர்களை புகழ்ந்து பேசும் 870 மாணவ மாணவியரும், அந்த புகழ்ச் சிக்கு தகுதி உள்ளவர்களாய் 35 ஆசிரி யர்களும் நிறைந்திருக்கும் பள்ளி... கோவளம் அரசு மேல்நிலைப் பள்ளி.
பள்ளி: செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூர் ஒன்றியம், கோவளத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சற்றே உள்ளடங்கி இருக்கும் இப்பள்ளியில் ஆய்வகங்கள், 'கிரிக்கெட்' வலை பயற்சிதளம், 'ஸ்னுாக்கர்' மேஜை என உட்கட்டமைப்பு பிரமிக்க வைக் கிறது. தனியார் அறக்கட்டளை உதவியுடன் பள்ளிப் பேருந்து வசதியும் இருக்கிறது!
பெருமை: ' பொருளாதார சூழல் காரணமா விருப்பமில்லாம இங்கே வந்தேன். இன்னைக்கு நான் ஸ்கூல் டாப்பர். ஒரு நாள், 'நம்ம ஸ்கூல்ல ஏன் கேர்ள்ஸ் கிரிக்கெட் டீம் இல்லை'ன்னு பி.டி., சார்கிட்டே கேட்டேன்; இப்போ, தேசிய அளவுல கிரிக் கெட் விளையாடுறேன். ஐ லவ் திஸ் ஸ்கூல்!'
- பிளஸ் 2 மாணவி நனினா .
கோரிக்கை: 'சிறப்பான செயல் பாடு'க்காக, 'பேராசிரியர் அன்பழகன் விருது - 2024' எங்களுக்கு கிடைச்சது; இந்த சந்தோஷத்தை மூச்சிழுத்து அனுபவிக்க முடியாதபடி, பள்ளிக்கு பின்னால அரசு குப்பை கிடங்குல இருந்து நாற்றம்! எங்க துறை அமைச்சர் நினைச்சா எங்களுக்கு சுத்தமான காற்று சீக்கிரம் கிடைக்கும்!'
- தலைமையாசிரியர் நக்கீரன்.

