PUBLISHED ON : செப் 14, 2025

'வாழ்க்கை வாய்ப்பு மட்டும்தான் தரும்; அதை தக்க வைச்சுக்க வேண்டியது நம்ம பொறுப்பு. அதுக்கு உங்க பலம் என்னன்னு உங்களுக்குத் தெரியணும்!'
யார் குரல்? : பொன்னி
வயது : 47
அடையாளம் : திருநங்கை
தன்னை அறிந்த தருணம்
சிறுவயதிலிருந்து பொன்னி நேசித்தது இரண்டு விஷயங்கள்; ஒன்று நடனம், மற்றொன்று படிப்பு! பக்கத்து வீட்டு கொழுக் கட்டைக்காக தனக்குத் தெரிந்த அடவுகளில் ஆடியவரை, 'நீ பொண்ணு மாதிரி நளினமா ஆடுறே; முறையா நடனம் கத்துக்கோ' என அவ்வீட்டு அக்காக்கள் ஆசை விதைத்திருக்கின்றனர்!
'அவங்க தந்த உற்சாகம், அடவுகள் மேல இருந்த ஆசை... உள்ளூர்ல இருந்த டான்ஸ் ஸ்கூல்ல சேர வாய்ப்பு கேட்டேன். அவங்க என்னை சேர்த்துக்கலை!' - பொன்னியின் குரலில் இன்னும் அந்த ஏமாற்றத் தின் வலி!
அதற்காக விட்டுவிட வில்லை; விடாமுயற்சி யோடு, 2022ல் மாவட்ட இசைப்பள்ளியில் பரதம் பயின்று தன் கனவை நிஜமாக்கியிருக்கிறார்
மூன்றாண்டு பயிற்சி; 2024ம் ஆண்டு விழுப்புரம் கூவாகம் விழாவில் முதல் பரிசு. அது தந்த ஊக்கத்தால், 'அபிநயா நிருத்யாலயா' நிறுவி, சென்னை, கொருக்குப்பேட்டை குழந்தை களுக்கு பரதம் கற்றுத் தந்திருக்கிறார்.
ஆசானாய் அந்நாள்
'கலையை கத்துக் கிட்டா மட்டும் போதுமா; அந்த திறமை மேடையேற வேண்டாமா... கொருக் குப்பேட்டை பகுதி திரு விழாவுல அரங்கேற்றத் துக்கு மேடை கேட்டேன்; 10க்கு 10 அளவுல மேடை கிடைச்சது; என் மாணவர்களை பரத கலைஞர்களா உணர வைச்சேன்!' - சிலிர்த்துச் சிரிக்கும் பொன்னிக்கு .. .
பரதத்தோடு கணிதமும் கைகூடி வர, இளநிலை கணிதத்தில் பட்டம். இப்போதும் தான் வசித்து வரும் துாத்துக்குடி, வசவப்பபுரம் சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்க ளுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கணக்கு பாடம் பயிற்றுவிக்கிறார்!
'கலைங்கிறது குழந்தை மாதிரி; நேசிக்கிற வங்ககிட்டே அது ஒட்டிக்கும். அதுக்கு பாகுபாடு காட்டத் தெரியாது. ஆனா, கலையை ரசிக் கிறவங்க கலைஞர் கள்கிட்டே பாகுபாடு காட்டு றாங்க; சில திருநங்கைகள் செய்ற தப்புக்கு எல்லாரை யும் சந்தேகப்படுறாங்க! என் கலையும் கல் வியும் இந்த பார்வையை கண்டிப்பா சரி பண்ணும்! ' - நம்பிக் கை யுடன் சொல்பவருக்கு, 'சிறந்த திருநங்கை - 2025' விருது தந்து கவுரவித் திருக்கிறது தமிழக அரசு.
தற்போது தாமிரபரணி கரையோ ரத்து கோவில் சிற்பங்களில் மிளிரும் கலை குறித்து முனைவர் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார் பொன்னி.
குறள் சொல்லும் குரல்
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்
பொருள்: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்பவருக்கு முடியாதது ஒன்றுமில்லை.

