sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

மனம் கொத்தி பறவை

/

மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை


PUBLISHED ON : மார் 23, 2025

Google News

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கருவாடு... கருவாடேய்ய்ய்...' கருவாட்டு விற்பனையை ஆச்சரியமூட்டும் தளத்திற்கு நகர்த்தியிருக்கிறது, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான... லெமூரியன்ஸ் ட்ரை பிஷ் ஹட்.

இந்த வார மனம் கொத்தி: கலைக்கதிரவன்

அடையாளம்: கருவாடு ஏற்றுமதி

இருப்பிடம்: மண்டபம், ராமநாதபுரம்.

பி.டெக்., முடிச்சிருக்கிற எனக்கு தனியார் நிறுவன பணிகள்ல 12 ஆண்டுகள் அனுபவம். இந்த தொழி லுக்கு வர எனக்கு மூணு விருப்பங்கள் முக்கியமா னதா இருந்தது...

1. சொந்த ஊர்ல வேலை செய்யணும்

2. பிடிச்ச வேலையை செய்யணும்

3. சீரான ஒரு வருமானம் கிடைக்கணும்

இன்னைக்கு என்னோட மூணு விருப்பங்களும் நிறைவேறி இருக்கு!

நிதானத்தின் பலன்



ஒன்றரை ஆண்டு திட்டமிடலுக்கும் ஆராய்ச்சிக் கும் பிறகு, மார்ச் 18, 2020ல் தன் வீட்டின் 10x7 அறை யில் 'ஆன்லைன்' கருவாடு விற்பனையை துவக்கி இருக்கிறார் கலைக்கதிரவன்; மார்ச் 25 முதல் 'கொரோனா' ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது.

'பெங்களூருல இருந்து கிடைச்ச முதல் ஆர்டர் கேன் சல். ஆரம்பமே தடைன்னாலும் எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்போ, என் நிறுவன கருவாடுகள் இந் தியா கடந்தும் மணக்குது!' - பரவசம் ஆகிறார்.

உங்க தொழில் பற்றி சொல்லுங்க கதிரவன்...



மீன்களை உலர வைக்கிற உப்பை தொழில்நுட்ப உதவியோட கண் காணிச்சு. குறிப்பிட்ட இடைவெளியில மாத்திக்கிட்டே இருப்போம். 100 900 கிராம் வரைக்குமான கரு வாடுகளை காற்றுப் புகாத பெட்டிகள்ல அடைக்கி றோம். குளிர்பதன பெட்டிகள்ல வைச்சு ஆறு மாதம் வரைக்கும் இதை பயன்படுத்தலாம்.

என் நிறுவன கருவாடுகள் இந்தியா கடந்தும் மணக்குது!



எங்க பெட்டிகள்ல இருக்குற 'கியூஆர்' கோடு மூலமா தரச்சான்றிதழை பார்த்துக்கலாம்; இதோட, எந்த கருவாடு எந்த வகை உணவுக்கு ஏற்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்; கருவாடு சமைக்கிற முறை பற்றிய வீடியோவையும் பார்க்கலாம். சமீபகாலமா, 'ரெடி டூ ஈட்' கருவாடுகளையும் விற்க ஆரம்பிச்சிருக்கோம்!

திருக்கை, கணவாய், காரல், விளமீன் உள்ளிட்ட 18 வகை மீன்களில் இருந்து 40க்கும் அதிகமான வகை கருவாடுகளை விற்பனைக்கு வைத்திருக்கிறது ட்ரை பிஷ் ஹட். மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு தயா ரிப்பு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் ரயில் நிலையத் திலும் கடை அமைத்திருக்கிறது.

கலைக்கதிரவனும் மனைவி அனிதாவும் இந்த 'ஸ்டார்ட் அப்'பின் ஆரம்பகால பணியாளர்கள். கலைக் கதிரவனின் நண்பன் கிருஷ்ணசாமியும் இவர்களோடு கைகோர்க்க, இன்று 12 பேர் பணியாற்றுகின்றனர்

மனதில் இருந்து...



'ரசிச்சு ருசிச்சு சாப்பிடுறப்போ குறு மணல் பற்கள்ல சிக்குற பிரச்னை 'ட்ரை பிஷ் ஹட்' தயாரிப்புல இருக்காது; கருவாடு அவ்வ ளவு சுத்தமா இருக்கும்!'

வாடிக்கையாளர் சுப்புராஜ், தேனி.






      Dinamalar
      Follow us