sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

முகவரி

/

முகவரி

முகவரி

முகவரி


PUBLISHED ON : மே 25, 2025

Google News

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இவர் இங்கே' என்றுரைக்கும் முகவரி அல்ல இது; 'இவர் இப்படி' என்று சொல்லும் முகவரி!

இவ்வாரம்... சட்டத்துறையில் 41 ஆண்டு அனுபவம்; 'அதிகாரம் மற்றும் பணம் படைத்தவர்களால் நீதிக்கான சாலை நெரிசல்மிக் கதாய் மாறியிருக்கிறது' என்று அறம் பேசும் மனம்; சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி; தற்போது, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்... பி.என்.பிரகாஷ்.

'உறுத்தல் இல்லா மனம்' - ஓய்வு பெற்ற நீதிபதி வாழ்வில் சாத்தியமா?

'சாத்தியம்'ங்கிறதுக்கு நானே சாட்சி; ஏன்னா, 'பணிக்காலத்துல நான் தீர்ப்பு எழுதுன 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள்ல சட்ட வரம்புகள் மீறப்படலை'ன்னு ஆணித்தரமா சொல்வேன்; அப்புறம் எதுக்காக இந்த உறுத்தல்?

உங்களது பணி நிறைவு நாளில் உயர் நீதிமன்றம் உங்களிடம் பேசியிருந்தால்...

'நீதிபதி பதவியை பயன்படுத்தி 'பட்டம்' திட்டம் மூலமா சிறைவாசிகள் வாழ்க்கையில நீ பாய்ச்சின வெளிச்சத்துல எனக்கு திருப்தி ன்னு நீ எப்படி பிரகாஷ் தெரிஞ்சுக்கிட்டே'ன்னு கேட்டிருக்கும்! தாய் மனசு பிள்ளைக்குத் தெரியாதா!

பதவி, புகழ், கவுரவம் - வாழ்வின் திருப்தி எதில்?

இது மூணும் நம்மால இன்னொருத்தருக்கு கிடைக்குதுன்னா அதுல உணர்ற திருப்தியை வாழ்க்கையில எதுவும் கொடுத்துடாது; இந்நாள் சாதனையாளரா முன்னாள் கைதி என்னை வணங்குறப்போ இதை நான் உணர்ந்திருக்கேன்!

இரு கரம் கூப்பும் 'வணக்கம்' கடவுளுக்கு இணையாக மனிதனுக்கும்; இதற்கு உடன்படுகிறீர்களா?

'இறைவனுக்கானதை உனக்கும் செய்றேன்'னு சக மனிதனை இறைவனா உணர வைக்கிறதுக்கும், 'எல்லா மனிதர்கள்கிட்டேயும் உன்னை நான் உணர்றேன்'னு இறைவனுக்கு உணர்த்துறதுக்குமான கருவி... வணக்கம்'ங்கிறது என் புரிதல்!

'பொய், உண்மை' - எது பலசாலி?

பொய்தான்; உண்மையை அடிச்சு துவம்சம் பண்ணிட்டு முன்னாடி வந்து நின்னுரும். ஆனா, தத்தி தடுமாறி எழுந்து வந்து பொய்க்கு முன்னால உண்மை கம்பீரமா நிற்கும் பாருங்க... ஒரு நீதிபதியா நான் அதை ரசிச்சிருக்கேன்!

பல சாட்சிகளை பார்த்திருக்கும் தங்கள் பார்வையில்... மனசாட்சி?

ஒவ்வொரு மனுஷனும் தான் செஞ்ச நல்லது கெட்டதுகளை எடை போட்டுக்க கடவுள் தந்திருக்கிற தராசு... மனசாட்சி. அனுபவத்துல சொல்றேன்... தராசுகள்ல துரு ஏறியிருக்கே தவிர, ஒருத்தர் கூட தராசை தொலைக்கலை!

'மனிதனின் ஆபத்தான உணர்வு' - எதைச் சொல்வீர்கள்?

பயம்; 'நாம இப்படிச் செய்யலேன்னா நம்மால வாழ முடியாதோ'ங்கிற பயம்தான் ஒரு குற்றத்துக்கான காரணமா இருக்கு! அதனாலதான், 'குற்றவாளிக்கு கொடுக்க வேண்டியது தண்டனை அல்ல... மன சிகிச்சை'ன்னு சொல்றேன்!

எந்த உணர்வு இல்லாவிடில் வாழ்க்கை அர்த்தமற்றது?

அன்பு! மனுஷனுக்கு பெரிய மனசும், அது முழுக்க அன்பும் இருக்கணும். 'பிராமணன்'னா 'பெரிய மனம் கொண்டவன்'னு சமஸ்கிருதம் சொல்லுது; இந்த மனசும் அது நிறைய அன்பும் இருக்குற எல்லார் வாழ்க்கையுமே அர்த்தமுள்ளதுதான்!

'இன்னும் எனக்கு புதிராக உள்ளது' - எதற்காக இப்படிச் சொல்வீர்கள்?

'பொது அடையாளம் இல்லாத நாடு; ஆளுக்கொரு ஜாதி, மதம், மொழி; வறுமை, ஊழல், ஏற்றத்தாழ்வு இருந்தும் நம்ம மக்களோட வாழ்க்கை முன்னேறிட்டே இருக்குறது எப்படி'ன்னு ரொம்ப காலமா யோசிச்சிட்டு இருக்குறேன்!

ஒரு குடிமகனாக சொல்லுங்கள்... தலைவனுக்கான தகுதிகள் என்னென்ன?

எளிமையா, நேர்மையா வாழணும்; தனக்கும் தன் குடும்பத்துக்கும் கிடைக்கிறது மக்களுக்கும் கிடைக்கிறதை உறுதிப்படுத்தணும்; தன் செயல்பாடுகளை பகுத்தறியுற அளவுக்கு அறிவார்ந்தவர்களா மக்களை உருவாக்கணும்!

இந்த சமூகம் மீதான தங்களின் கோபம்?

கோபம் இல்ல; 'தலைவன்' அந்தஸ்துக்கு தகுதியில்லாத ஆட்களை கொண்டாடுற அளவுக்கு காந்தி, அம்பேத்கர், வல்லபாய் படேல், ராஜாஜி, காமராஜர், நரேந்திர மோடியை கொண்டாடாம இருக்குறதுல எனக்கு வருத்தம் இருக்கு!

எதிர்பார்த்தபடியே வாய்த்திருக்கிறதா முதுமை?

ஹா... ஹா... நான் இன்னும் அதைப்பத்தி யோசிக்கவே இல்லை. என்னோட இந்த 65 வயசு என் மனசையோ, என் சிந்தனையையோ லேசா கூட இன்னும் கிள்ளிவிடலை; முதுமை எனக்கு இன்னும் அறிமுகமே ஆகலை!

இந்த பதவி அடையாளங்கள் தவிர்த்து நீங்கள் யார்?

நாணல்.






      Dinamalar
      Follow us