தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/அவியல்/எல்ஐகே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

எல்ஐகே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

எல்ஐகே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி


PUBLISHED ON : ஏப் 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்றைய காதலே இன்றும் இன்றைய காதலே நாளையும்

'எல்ஐகே செயலி மூலம் மட்டுமே சரியான காதல் துணையை தேர்ந்தெடுக்க முடியும்' என்கிற சமூக நிலையை 2040ம் ஆண்டில் உருவாக்குகிறார் அதன் நிறுவனர் சூரியன். அச்செயலி வழி வாசுவின் காதலை அளவிடும் தீமா, அவனிடம் இருந்து பிரிகிறாள். 'மனித மனதை செயலியால் கணிக்க முடியாது' என்பதை வாசு அவளுக்கு எவ்வாறு நிரூபிக்கிறான்?

'காதல் எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்' என்று பகுத்தறிவு பாடினாலும், 'அதையும் தாண்டி அது புனிதமானது' என்று மெய்ஞானம் சொன்னாலும், காதல் எதுவாக இருந்ததோ அதுவாகவே இருக்கிறது.

தொழில்நுட்பம் வழி மனிதர்கள் அதிகமாக பழகத் துவங்கியபின், அவர்களின் மனம் சக மனதை நேரடியாக புரிந்து கொள்ள தொழில்நுட்பத்தை நாடுகிறது; அத்தொழில் நுட்பம் இந்த இயலாமையை மறைக்க பரிசுப் பொருட்கள், காதலர் தின கொண்டாட்டம், சுற்றுலா, ஷாப்பிங் உள்ளிட்டவற்றை கொண்டு காதல் வளர்க்கச் சொல்கிறது!

இந்த உண்மை அடிப்படையில், மனித உணர்ச்சி, கலாசார மாற்றம், வர்த்தகம், தொழில்நுட்ப தலையீடு ஆகியவற்றை, 'காதல்' என்கிற புள்ளியில் இணைத்து விக்னேஷ் சிவன் அமைத்திருக்கும் திரைக்களம் எதிர்காலத்தை கண்முன் காட்டுகிறது. ஆனால், நாயகியை முற்றிலும் பலவீனமாகவும், நாயகன் அவளுக்கு அனைத்தையும் கற்பிப்பவனாகவும் இருப்பது 'அப்டேட்' இல்லா சிந்தனை!

'தொழில்நுட்பத்திற்கு மக்கள் அடிமைகளாக இருக்கின்றனர்' என்று வெறுமனே வசை பாடா மல், '2040ல் தொழில்நுட்பம் வாழ்க்கை சூழலை எப்படி மாற்றியிருக்கும்' என்கிற கற்பனை ரசிக்கும்படி இருக்கிறது. கவுரவ பாத்திரத்தில் எவ்வித சீற்றமுமின்றி சீமான் ஈர்க்கிறார்.

இளசுகளை கவரும் நடிப்பு மொழியால் பிரதீப் ரங்க நாதனுக்கு மற்றுமொரு சுமார் வெற்றி. இ ன்றைய இளம் தலைமுறைக்கான பொழுதுபோக்கு கதையில் இப்படியொரு மெசேஜ் என்பது பாராட்டத்தக்கது.

ஆக...

வில்லனுக்கு 'சூரியன்' என பெயர் சூட்டியிருப்பதால், 'ஜெயக்கடா'வுக்கும் இப்படைப்பில் ஆறுதல் கிடைக்கும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us