PUBLISHED ON : பிப் 02, 2025

'பிறிதொருவரை 'தந்தை' என அழைப்பது பகுத்தறிவா' என்று சிந்திக்காத கைப்பிள்ளையும், பகுத்தறியும் அவன் தந்தையும்...
'சத்தியமா சொல்றேன்... சீமான் பொய் சொல்றார். ஈ.வெ.ரா., பற்றி எனக்கு எல்லாம் தெரியும். நீங்க வேணும்னா... என்னை சோதிச்சுப் பாருங்கப்பா!'
'அப்படியா... சரி சொல்லு; 'இரும்பை பயன்படுத்தியதில் தமிழகம் முன்னோடின்னு பெருமைப்படுற மாதிரி, ஊழலையும் இரும்பு கரத்தால் ஒழித்து தமிழகத்தை முன்னோடியாக்க வேண்டும்'னு உயர் நீதிமன்றம் கருத்து சொன்னப்போ, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்ட மனசெல்லாம் எப்படி துடிச்சிருக்கும்னு உனக்குத் தெரியுமா?
'மது விற்று மக்கள் உயிர் பறிக்கிற தமிழக அரசு, 'பண்ணுாரை விட பரந்துாரில் 541 குடும்பங்கள் குறைவாக இருப்பதால், விமான நிலையம் பரந்துாரில் அமைகிறது'ன்னு மனிதம் ததும்ப விளக்கம் தந்ததுக்கான காரணம் என்னன்னு தெரியுமா?'
'அப்பா... என்னப்பா இது...'
'அட இருடா... நான் இன்னும் முடிக்கலை; 'கொரோனா கால பணியின் போது உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனுக்கு இரண்டு மனைவியர் என சட்டசபையில் அமைச்சர் சொன்னது தவறான தகவல்'னு அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் சொல்லியும், சீமான் தராத ஆதாரம் மாதிரி அரசும் ஆதாரம் தராதது ஏன்'னு தெரியுமா?'
'தெரியாதுப்பா... எனக்கு ஈ.வெ.ரா., பற்றி மட்டும்தான் தெரியும்!'
'ஓஹோ... சரி... இதுக்கு பதில் சொல்லு; ஈ.வெ.ரா., - மணியம்மை திருமணத்தை கண்டிச்ச கழக தோழர்கள் பெயரை தன் 'திராவிட நாடு' இதழில், 'கண்ணீர் துளிகள்' தலைப்புல பிரசுரம் பண்ணின அண்ணாதுரையை, 1957 சட்டசபை தேர்தல்ல தோற்கடிக்க, 'கண்ணீர் துளிகளுக்கு ஓட்டுப் போடாதீர்கள்'னு காஞ்சிபுரத்துல வீடு வீடாப் போய் ஈ.வெ.ரா., பிரசாரம் பண்ணினது தெரியுமா?'
'இல்லையேப்பா... இது தெரியாதே!'
'இது போதும்டா... நீ மூளைக்காரன்னு நான் ஒத்துக்குறேன்!'
'ரொம்ப நன்றிப்பா!'