PUBLISHED ON : ஆக 03, 2025

கைப்புள்ள இப்போ என்ன யோசிக்கிறான்னா...
'மத்திய பா.ஜ., அரசும் அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க.,வும் தமிழகத்திற்கு இழைத்துள்ள, இழைக்க வுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்துக் கும் எடுத்துச் சொல்வதுதான் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பின் நோக்கம்'னு முதல்வர் சொல்லியிருக்காரு இல்லையா...
அதைச் சொல்ல வீடு தேடி வர்றவங்க, 'குடும்பத்துல எல்லாரும் மூணுவேளையும் பசியாற சாப்பிடுறீங்களா; எல்லாருக்கும் பிழையில்லாம தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா; படிச்சுட்டு யாரும் வேலை இல்லாம இருக்குறீங்களா; புழுதி கிளப்புற 'திராவிட மாடல்' சாலைகள்ல வண்டி ஓட்டுறப்போ பயமா இருக்குதா'ன்னும் கேட்கணுமா... இல்லையா'ன்னு யோசிக் கிறான்! ஏலேய்... கருவாப்பயலே... அப்படித் தானடா?
ஓ... தொரை வாயத் திறக்க மாட்டீங் களோ; இந்தாப்பா கட்டதுரை... இவனை என்னன்னு கேளு!
டேய்... சொல்றா; 'இண்டி கூட்டணியை கட்டமைச்சது இவர்தான்'னு உடன்பிறப் புகள் கைகாட்டுன நம்ம முதல்வருக்கு இப்போ உடம்பு சரியில்லாம இருந்தப்போ, 'இண்டி' கூட்டணி கட்சி தலைவருங்க எல்லாரும் ஏன் நலம் விசாரிக்கலை'ன்னு வெறித்தனமா யோசிக்கிறே... அப்படித் தானே; டேய்... உன்னைத்தான்டா... ம்ஹும்... இன்னைக்கு இவனுக்கு கட்டம் சரியில்லை!
ஏன் பாஸ்... இவனுங்க இப்படி கத்துற அளவுக்கு அப்படி என்ன யோசிக்கிறீங்க; 'டில்லியில் தமிழகத்தின் உறுதியான குரல் ஒலிக்க பாடுபடுவேன்'னு எம்.பி.,யா பதவி ஏற்றதும் நடிகர் கமல்ஹாசன் சொன்னதை வைச்சு, 'யார் அந்த சார்'னு அங்கே குரல் கொடுப்பாரா'ன்னு யோசிக்கிறீங்களா?
ம்ஹும்... அட நாறப்பயலுகளா... இப்படி யெல்லாம் யோசிச்சா நான் ஏன்டா இப்படி டவுசரோட நிற்கப் போறேன்; இங்க வா... 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்ல 'மகளிர் உரிமைத்தொகை'க்கு அப்ளிகேஷன் கொடுக்கத் 'தகுதியுள்ள' ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாமா'ன்னு அண்ணன் யோசிச்சிட்டு இருக்கேன்டா!
அதானே பார்த்தேன்... கைப்புள்ளயா... கொக்கா... நீ யோசி தல!
கைப்புள்ள இப்போ என்ன யோசிக்கிறான்னா...

