sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

/

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்


PUBLISHED ON : ஆக 03, 2025

Google News

PUBLISHED ON : ஆக 03, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரத்த சம்பந்தம் இல்லாத மனைவிக்காக நீங்க எதை இழந்தாலும் அதுக்கு பேரு... காதல்தான்!' - இது...

யார் குரல்? திருவேங்கடம்

வயது : 59

அடையாளம் 'மதிப்பிற்குரிய' கணவர்


காஞ்சிபுரத்தின் மாங்காடு; குணப்படுத்தும் மருந்தே இல்லாத 'எம்.என்.டி.,' எனும் நரம்பு நோய் பாதிப்பால், சதை கரைந்து தோல் போர்த்தியபடி படுக்கையில் சீதாலட்சுமி; 2019 முதல் குழந்தையாகிப் போன மனைவிக்காக எல்லாமுமாக நிற்கும் திருவேங்கடம்; 30 ஆண்டு கால இல்லறம்!

இப்படி கவனிச்சுக்குற அளவுக்கு சீதாம்மா என்ன பண்ணிட்டாங்க?

என்ன பண்ணலை; என்னை மூணு டிகிரி முடிக்க வைச்சது இவதான்; நான் 13 கம்பெனிகள் மாறினப்போ நம்பிக்கையா இருந்தது இவதான்; சிதம்ப ரத்துல இருந்து வந்த என்னை சென்னையில வீடு வாங்க வைச்சது இவதான்; இப்போ நான் தீர்க்குறது நன்றிக்கடன்; ப்ப்ப்ச்ச்... எனக்கு வந்த எல்லா நோய்களுக்கும் மருந்து இருந்துச்சு; ஆனா, என் சீதாவுக்கு...' - வார்த்தைகளை விழுங்குகிறது மனவலி!

அன்றாடம் அதிகாலை 5:30 மணிக்கு துவங்குகிறது இவர் களின் ஒருநாள். காலை பணி விடைகளுக்குப் பின் ஆளுக்கு இரண்டு இட்லி, மதியம் கையளவு தயிர் சாதம், இரவில் சீதாலட்சுமிக்கு இரு இட்லி, அவருக்கு மோர் சாதம். இந்நேரங்களைத் தவிர இவர் களின் பொழுதை நகர்த்துவது... பார்வை... பார்வை... காதல்!



எப்படிம்மா அது?


(நாம் கேட்டதும் சீதாம்மா திருவேங்கடத்தைப் பார்க்க, மனைவியினது மனம் படித்தார் கணவர்)

'அவர் இப்படி அடைஞ்சு கிடக்கிறது எனக்கு ரொம்ப வலிக்குது. சாயங்காலம் 5:30 மணிக்கு மாத்திரை போட்டதும் ராத்திரி 9:30 மணி வரைக்கும் து ாங்குவேன். அந்தநேரத்துலே யாவது வெளியே போயிட்டு வாங்கன்னா கேட்க மாட்டேங்குறார்!'

சீதாம்மாவின் பார்வை படும் இடமெல்லாம் அவரது இளம்வயது புகைப்படங்கள். 'இப்போதும் நீயே வீட்டின் எஜமானி' என்பதை உணர்த்த அவரது தலையணைக்கு கீழ் ஒரு பணப்பை வைத்திருக்கும் திருவேங்கடம், மனைவியின் அனுமதியுடன் செலவுக்கு பணம் எடுத்துக் கொள்கிறார்.

'நாங்க நல்லா வாழ்ந்து சரிஞ்சவங்க! இன்னைக்கு நான் இல்லேன்னா அடுத்த ஒரு மணி நேரத்துல என் சீதாவோட உயிர் பிரிஞ்சிரும். எந்த டாக்டராவது சீதாவை என்கிட்டே பேச வைச்சிட்டா அவரை நான் கடவுளா கும்பி டு வேன்!' - அணை மீறுகிறது திருவேங்கடத்தின் கண்ணீர்.



குறள் சொல்லும் குரல்: குறள் 1122


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.

பொருள்: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மை ஆனவையோ அத்தன்மையானவை!

98405 25988






      Dinamalar
      Follow us