PUBLISHED ON : அக் 12, 2025

ஏன் மணியா... வடகிழக்கு மாநிலங்களை 'அஷ்டலட்சுமி'ன்னு சொல்லி, 'வடகிழக்குக்கான பிரதமரின் மேம்பாட்டு முயற்சி' திட்டம் துவக்கி, சரமாரியா சாதிச்சுட்டு வர்ற பிரதமரை நீ ஏன் பாராட்டவே மாட்டேங்குறே?
மணியன் மனதிற்குள்... 'டேய் அமாவாசை... என் காசுல வளர்ந்த நீ, மாசா மாசம் எனக்கு பிச்சை போடுற மாதிரி போடுறே; அதை பெருமையா வாங்குற நான் எப்படி மூளைக்காரனாட்டம் பேசுவேன்னு எதிர்பார்க்குறே?
என்ன மணியா... நேத்து என்கிட்டே வாங்குன 1,000 ரூபாயைப் பத்தி யோசிச்சிட்டு இருக்குறியா?
ஆமாங்ணா... பகுத்தறிவுவாதியோட அல்லக்கையா இருந்துட்டு இதுகூட யோசிக்கலேன்னா எப்படீங்க?
நக்கலு... சரி... தமிழகம் எது எதுக்கெல்லாம் எதிரா போராடும்னு, சமீபத்துல நம்ம முதல்வர் பட்டியல் வாசிச்சதை கேட்டப்போ எனக்கு உடம்பு முறுக்கேறுச்சு; ஆமா... நீ எப்படி?
என் தலைவனைக் காட்டிலும் யாருக்காச்சும் அதிகமா கூட்டம் சேர்ந்துச்சுன்னா அந்த கூட்டத்துக்கு எதிரா நானும் போராடுவேங்ணா!
அய்யோ மணியா... அதுக்குப் பேரு போராட்டம் இல்ல... பயம்; உன் தலைவன் காணாம போயிருவானோங்கிற பயம்! இதுக்குபதிலா, 'தெருநாய் கடி, 'டெங்கு' கொசுக்கடியை எதிர்த்து போராடுவேன்'னு அப்படி இப்படி எதையாவது சொல்லலாமில்ல?
சொல்லலாங்ணா... ஆனா, 'வதந்தி பரப்புறேன்'னு...
ஓ... அதுவும் சரிதான்; அப்போ, இப்படி செய்யேன்; 2021ல ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தோட நிதிநிலைமையை வெள்ளை அறிக்கையா வெளியிட்ட மாதிரி, இப்போ ஆட்சி முடியுறபோதும் இந்த அரசு செய்யணும்னு போராடு!
அடப்போங்ணா; காசை வாங்குனோமா... ஓட்டு போட்டோமான்னு இல்லாம இதெல்லாம் எதுக்குங்...
அட மானங்கெட்ட மணியா... 2021லேயே ஒவ்வொரு குடும்பத்து மேலேயும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூவா கடன் இருக்குன்னு சொன்னாங்களப்பா...
அட நீங்க சும்மா இருங்ணா... சட்டு புட்டுன்னு கரையேறி பட்டாபட்டியை அவுத்து போடுங்க; துவைச்சுட்டு நானும் கரை ஏறணும்!
யாரு... நீயி... இந்தா 200 ரூவா; நல்லா கசக்கிப் போடு!

