sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

கல்லும் கலையும்: ராஜவாத்தியத்தின் தனி ஆவர்த்தனம்!

/

கல்லும் கலையும்: ராஜவாத்தியத்தின் தனி ஆவர்த்தனம்!

கல்லும் கலையும்: ராஜவாத்தியத்தின் தனி ஆவர்த்தனம்!

கல்லும் கலையும்: ராஜவாத்தியத்தின் தனி ஆவர்த்தனம்!


PUBLISHED ON : அக் 14, 2025

Google News

PUBLISHED ON : அக் 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெட்டுவான்கோவில் கோபுர சிகரம்; அதில், தெற்கு நோக்கி அமர்ந்து மிருதங்கம் இசைக்கும் ஒரு சிற்பம். தான் எழுப்பும் இசையை பாறைகளில் மோதவும், காற்றில் புரளவும், காலத்தில் கரைந்து போகவும் செய்யும் அவ்விரல் வித்தகரின் நாமம்... தட்சிணாமூர்த்தி!

கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையின் கழுகுமலையின் வடபுறத்தில் உள்ளது வெட்டுவான்கோவில்.

கோபுரத்தின் தெற்குபக்கத்தில் வலதுகால் மடித்து, இடதுகாலை தொங்க விட்டு ஒய்யாரமாக மிருதங்கம் வாசித்துக் கொண்டிருக்கிறார் தட்சிணாமூர்த்தி! தொங்கும் இடதுகால் 'அறியாமை' எனும் குள்ள அரக்கனை மிதித்திருக்கிறது!

நான்கு கரங்களுடன் இந்த தட்சிணாமூர்த்தி; பின்னிரு கரங்களில் வலக்கரம் பரசுவைத் தாங்க, இடக்கரத்தில் ருத்ராட்ச மாலை; முன்னிரு கரங்களில் வலக்கரம் மிருதங்கம் இசைக்க, இசைக்கருவியை அணைத்திருக்கும் இடக்கரத்தின் விரல்களை சிதைத்திருக்கிறது காலம்!

'சுருள்முடியுடன் ஜடாபாரம்; காதில் பத்ரகுண்டம்; கழுத்தில் பதக்கம், முத்தாரம்; இடையில்... கற்கள் பதிக்கப்பட்ட அரைப்பட்டை; கீழ்நோக்கிய பார்வையுடன் சற்றே வலப்புறம் சாய்ந்திருக்கும் முகத்தில் சிற்பியின் திறன் சொல்லும் புன்முறுவலை கவனித்தீர்களா' என்கிறார் ஓய்வுபெற்ற தொல்லியல்துறை காப்பாட்சியர் செ.மா.கணபதி.






      Dinamalar
      Follow us