
உன்னைப் பொறுத்தவரைக்கும் நான் செஞ்சுட்டு இருக்குறது குற்றம்; என்னைப் பொறுத்தவரைக்கும் இது விவசாயம்; புரியலை... களை எடுக்குறேன்!
அய்யா... எதை 'களை'ன்னு சொல்றீங்க?
இந்த ஜனவரி 26ம் தேதி சென்னை, அடையார்ல சாக்கு மூட்டைக்குள்ளே பீஹார் இளைஞன் சடலமா கிடந்தது உனக்கு ஞாபகம் இருக்கா; சரி... 30ம் தேதி அவன் மனைவியோட சடலம் கிடைச்சதாவது...
ஆங்... ஞாபகத்துல இருக்குங்க; 'அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படலை'ன்னு 24 மணி நேரத்துலேயே 'பிரேத பரிசோதனை அறிக்கை' வந்தது கூட ஞாபகத்துல இருக்கு!
சபாஷ்... இவ்வளவு ஞாபகம் வைச்சிருக்கிற நீ, 'விளாத்திகுளம் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கான்னு தெரிஞ்சுக்க ஏன் நாலு நாள் ஆச்சு'ன்னு ஏன்டா கொதிக்கலை; ஆக... நீ ஒரு களை!
இல்லீங்கய்யா... 'கரூர் சம்பவத்துல, 41 பேரோட பிரேத பரிசோதனையை ஒரே ராத்திரியில எப்படி முடிக்க முடிஞ்சது'ன்னு நிறைய பேர் கேட்டாங்களே!
ப்ப்ச்ச்ச்... இதுக்குதான்டா உங்களை நான் 'களை'ன்னு சொல்றேன்; எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடணும்னு கூட உங்களுக்குத் தெரியலை பாரு; அது... 'அரசியல்'டா!
தெரியும்யா... ஆனா, நாங்க எவ்வளவுதான் ஞாபகம் வைச்சுக்க முடியும்... சொல்லுங்க!
என்ன ஞாபகம் வைச்சிருக்கே நீ... 'ராமாயணம் நடந்த கதை அல்ல; வால்மீகியின் கற்பனை மட்டுமே'ன்னு 'முரசொலி'யில மு.கருணாநிதி அழுத்தமா பதிவு செஞ்சதை ஞாபகம் வைச்சிருக்கியா?
இல்ல... 1986 திருநெல்வேலி, அருப்புக்கோட்டை இடைத்தேர்தல்ல அ.தி.மு.க.,கிட்டே தோற்றதுக்கு அப்புறம், 'மறைந்திருந்து 'மானமிகு' வாலியை வீழ்த்திய 'மாண்புமிகு' ராமச்சந்திரனை, 'மாவீரன்' என்று போற்ற மகாகவி கம்பனே தயங்கினான் என்றால்... மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே'ன்னு, தான் 'கற்பனை'ன்னு சொன்னதையே தன் 'நிஜ' தோல்வியோட ஒப்பிட்டு, தி.மு.க., முப்பெரும் விழாவுல அவர் கைதட்டல் அள்ளுனதை ஞாபகம் வைச்சிருக்கியா?
இரண்டுமே இல்லீங்க... இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில ஹிந்து சமய அறநிலைய துறைக்கு வழங்கப்பட்ட நிதி 1,190 கோடி ரூபாய்ங்கிறதை ஞாபகம் வைச்சிருக்கேன்.
ம்ஹும்... நான் களை எடுக்க வந்தது தப்பே இல்லடா.

