sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/நாங்க என்ன சொல்றோம்னா...: பிரதிச்சாயா (மலையாளம்)

நாங்க என்ன சொல்றோம்னா...: பிரதிச்சாயா (மலையாளம்)

நாங்க என்ன சொல்றோம்னா...: பிரதிச்சாயா (மலையாளம்)


PUBLISHED ON : மார் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசியல் காட்டின் தந்திரங்கள்; வேட்டைகள்

வசமாய் சிக்கிய பின்னும், 'நான் மீண்டும் வருவேன்' என்று மாநில முதல்வரிடம் முறைத்துவிட்டு கைதாகும் 'கார்ப்பரேட் முதலாளி'க்கு ஓநாயின் குணம் என்றால், அரசியல் வித்தைகளில் கில்லாடியாய் இருந்து பொய்யான 'கில்மா' குற்றச்சாட்டில் மரிக்கும் முன்னாள் முதல்வரின் நிர்வாக சாதுர்யத்தை குறைத்து மதிப்பிட்டது போல் ஆகிவிடும்!

இல்லை... 'அறம்' என்பதை அறவே மறந்து முதல்வர் சிதைய காரணமான அந்த 'டிவி' நெறியாளர் ஓநாய் என்றால், அந்த ஓநாயை அவன் மேடையிலேயே பலிகொண்ட இந்நாள் முதல்வரை என்ன வென்று சொல்வது; முன்னாள் முதல்வரின் இளைய மகனாக நிவின்பாலி ஏற்றிருக்கும் அப்பாத்திரத்தை, 'மாண்புமிகு ஓநாய்' எனச் சொல்வதே பொருந்தும்!

'திறமையுள்ள ஒருவனை பணியில் அமர்த்தியிருக்கும் நிறுவனத் தலைவன் பெரும் மூளைக்காரன் என்றால், அந்த திறமைசாலி எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுவான்' என்பதற்கு ஊடக நெறியாளர் பாத்திரம் சாட்சி; 'மிகச்சிறந்த அரசியல்வாதி, ஒப்பனைகளுக்கு தன்னை ஒப்புக் கொடுக் காது ஒப்பற்ற தன் தந்திரங்கள் மூலம் தனித்து தெரிவான்' எனும் உண்மைக்கு, முன்னாள் முதல்வர் பாத்திரம் சாட்சி; தகித்துக் கிடக்கும் கேரள, தமிழக அரசியல் களங்களில் உலவும் சில பிம்பங்களை கண்முன் நிறுத்துகிறது படைப்பு!

நிவின் பாலி முதல்வராக பதவியேற்கும் காட்சியின் பின்னணி பாடலில், 'ஜனநாயகனே வா...' என்றொரு வரி; இது ஒலிக்கும் தருணத்திலும், அரசியல் ஆதாயங் களுக்காக பெண்ணை முன்னிறுத்தி அழிக்கப்பட்ட தந்தையின் கவுரவத்தை மகன் மீட்கும் 'க்ளைமாக்ஸ்' காட்சியிலும் 'விசில்' பறக்கிறது.

'அருவருப்பான எல்லைக்கும் அரசியல் செல்லும்' என்பது திரைக்கதையின் பிரதான முடிச்சு; அதை நிஜத்தில் பார்த்து பழகியிருப்பதால், 'ப்ப்பூ... இவ்வளவு தானா' என்ற உணர்வு நமக்கு; 'ஓநாய்' குணம் ரசிப்பின் படம் பிடிக்கும்.

ஆக..

'மக்கள் நீதி மய்ய தலைவர் செய்திருப்பது தியாகம்' என்றால், இது 'அரசியல்' படமல்ல

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us