நாங்க என்ன சொல்றோம்னா...: முத்து என்கிற காட்டான் (வெப் சீரிஸ்)
நாங்க என்ன சொல்றோம்னா...: முத்து என்கிற காட்டான் (வெப் சீரிஸ்)
PUBLISHED ON : மார் 29, 2026

முத்து என்கிற காட்டான்... எப்படிப்பட்டவன்?
கிடைத்த ஆண் தலைக்கான உடலை தேடும் தேனி, பெரியவீரம்பட்டி காவல் துறையின் விசா ரணை வழி விரியும் பத்து அத்தியாயங்கள்!
'யாருடைய தலை' என்று துவங்கும் விசாரணையில், 'இவன் முத்து' என்பதும், 1997ல் ஒட்டன்சத்திரத்தில் வாட்ச் மெக்கானிக், 2005ல் யானை பாகன், 2006ல் கேரள அனாதைகள் இல்ல மேலாளர், 2012ல் ஆட்டுப்புழுக்கை வியாபாரி, 2013ல் கண்மணி நடன குழுவின் பாடிகார்ட் என பல அவதாரங்கள்; இவை வழியே அவன் கடந்த மனிதர்கள் திரைக்கதையை நகர்த்துகின்றனர்.
அனுபவத்தால் நிதானப்பட்ட மனதிற்குள், பாம்பின் துளி விஷம் போல பழி தீர்க்கும் வெறி; இவ்வஞ்சம் கொண்ட முத்துவை புரிந்து கொள்ள உதவுகிறது விஜய் சேதுபதியின் நடிப்பு. மனதிற்குள் ஆறாத காயம், மர்மமான கடந்த காலம் கொண்ட இப்பாத் திர வார்ப்பு தரும் சுவாரஸ்யம் கதையின் பலம்!
முத்துவுக்காக கண்ணீர் சிந்தும் உணவக முதலாளி, 'இறுதி அஞ்சலி' செலுத்தும் 'பட்டாளம்' பாபு, அவனை காதலித்த சிந்து, காதலிக்கும் மீனா என, ஆங்காங்கே வந்துபோகும் கதாபாத்திரங்களும், 'ஏன் குறிப்பிட்ட அந்த இடத்தில் அவன் தலை கண்டறியப்பட்டது' என்றுணர்த்தும் ஓவியமும் சிறந்த டைரக்டோரியல் டச். 'சோம்பேறிகளோ' என்று சந்தேகமூட்டும் வகையில் அறிமுகமாகி, சிறப்பாக செயலாற்றும் காவலர் பாத்திரங்களும் திறன்மிகு இயக்கத்திற்கு பெருமை சேர்க்கின்றன!
கொலையுண்டவனின் பின்னணி யை அறிந்து கொள்வதற்கான காட்சிகள் நத்தை போல ஊர்ந்தாலும், சக மனிதர்களின் வாழ்வில் ஒருவர் ஏற் படுத் தி விடும் தாக் கம் குறித்த உரையாடல் களில் உயர்ந்து நிற் கிறது இக்கதை. 'த்ரில்லர்' என்பதற்குள் இது அடங்காது; 'டிராமா' ரசிகர்கள் தேர்வு செய்யலாம்.
ஆக...
குற்றவாளியின் மனிதத்தை சிலாகிக்கும் இதனை, ஏப்ரல் 23ல் மறந்து விரல் நீட்டுவது உத்தமம்
