
'இவை எனக்கு நானே கேட்டுக் கொண்டவை. கேள்விகளில் நியாயம் இருப்பின் நீங்களும் கேட்டு பதில் பெறுங்கள்!'
தமிழகத்தின் ஒரு மனசாட்சி
01. 'யாரோ ஒரு பெண்ணுக்கு சென்னையில் நிகழ்ந்தது என் வீட்டு பெண்களுக்கு நிச்சயம் நிகழாது' எனும் அசட்டு நம்பிக்கையில் தானே புத்தாண்டு கொண்டாடினாய்?
02. ஈ.வெ.ரா.,வின் 'பெண் ஏன் அடிமையானாள்' புத்தகத்தை வாசிக்கச் சொல்லும் தமிழகம், 'அண்ணா பல்கலை மாணவி தன் ஆண் நண்பருடன் இரவில் உலவியது தவறு' என்று உருட்டிய போது காறி உமிழத் தோன்றியதா?
03. சொல்... அந்த பெண் புகார் கொடுக்காதிருந்தால், 'சிறப்பான தமிழகம்; பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகம்' என்றுதானே இன்னும் நம்பிக் கொண்டிருப்பாய்?
04. பெண்களை சதைப்பிண்டமாக பார்க்கும் ஆண் மிருகங்களை உருவாக்கியிருக்கும் நவீன தமிழகத்தின் கல்வி மீது, இப்போதேனும் உனக்கு விமர்சனம் உண்டா?
05. மாணவி பாலியல் குற்ற விவகாரத்தில் திரைத்துறையினரின் கருத்தை விட, தமிழக ஆசிரியர்களின் எழுச்சி அவசியமென நினைக்கிறாயா?
06. நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்திருப்பின் இப்பிரச்னையின் தீவிரத்தை தமிழகம் முழுக்க எப்படி கொண்டு சேர்த்திருப்பார் என்று கற்பனை செய்து சிலிர்த்தாயா?
07. 'தமிழகத்தில் நிகழும் கொடும் குற்றங்களை கடவுளிடம் முறையிடும் வகையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சொடுக்குவது பருத்தி சாட்டையா' எனும் உன் அத்தியாவசிய ஆய்வுக்கு பதில் கிடைத்து விட்டதா?
7½ 'யார் அந்த சார்?' - உனக்காவது தெரியுமா?