
ஓட்டு போட்ட உரிமையில் 'நம்பர் ஒன்' முதல்வரிடம் கேட்கிறது தமிழகம்...
01. 'பாலியல் குற்றங்களுக்கு தாமதமின்றி தண்டனை வழங்க மாவட்டரீதியாக தனி நீதிமன்றம் தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்படும்' என டிச., 27, 2020ல் அறிக்கை; நேற்று... அறிவிப்பு; 44 மாத ஆட்சிக்குப் பின் இது நேர்மையா முதல்வரே?
02. 'கருணாநிதிக்கு ஆறடி இடம் மறுத்த பழனிசாமிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா' எனும் தங்களது கோபம் போன்றதுதானே, 'தமிழக மாணவியை பாதுகாக்க இயலாத அரசு தமிழகத்திற்கு பாதுகாப்பு தருமா' எனும் கேள்வி?
03. 'குற்றச் செயல்களுக்காக கட்சியில் இருந்து 'தற்காலிகமாக' உடன்பிறப்புகள் நீக்கப்படுகையில், 'தி.மு.க., எனும் பெட்டகத்தின் உடைகள் அனைத்தும் தரமானவை' எனும் தொண்டர்கள் பற்றிய உங்களது புகழுரை நினைவிற்கு வருமா?
04. 'நிர்பயா நிதியை மிக மோசமாக பயன்படுத்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று' என்பது 2019ல் மத்திய அரசிடம் அ.தி.மு.க., அரசு வாங்கிய குட்டு. தி.மு.க., ஆட்சியில் இந்நிதியின் பயன்பாடு என்ன?
05. 'மனித முகத்தின் நிறை குறைகளை காட்டும் கண்ணாடி போல் ஆளுங்கட்சியின் நிறை குறைகளை காட்டுவது சட்டசபை' என்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி; சட்டசபை நிகழ்வுகளின் முழுமையான நேரலை எப்போது?
06. '2031ல் ஸ்டாலினே பிரதமர்' என்கிறார் அமைச்சர் துரைமுருகன்; 'இண்டி கூட்டணிக்கு அடித்தளமிட்டவர் ஸ்டாலின்' என்கிறது தி.மு.க.; 'கூட்டணி தலைமைக்கு மம்தா தகுதியானவர்' என்கின்றனர் இண்டி கூட்டாளிகள்; எது சரி?
07. 'நான் ஆளுமை திறனற்றவன் எனில் என்னை எதிர்க்க எதற்காக ஒன்றுகூட வேண்டும்' என்பது எதிரிகளுக்கான உங்களது கேள்வி. சொல்லுங்கள்... நல்லாட்சி தருவதாக சொல்லும் உங்களுக்கு 2026ல் கூட்டணி அவசியமா?
7½ யார் அந்த சார்?