sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

அது... நீங்களா?

/

அது... நீங்களா?

அது... நீங்களா?

அது... நீங்களா?


PUBLISHED ON : ஜன 12, 2025

Google News

PUBLISHED ON : ஜன 12, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இப்போது ரயிலில் எனக்கெதிரே அமர்ந்திருக்கும் முதியவர் அவர்தான்... அவரேதான்!

ஒரு மணி நேரத்திற்கு முன் ஈரோடு வில்லரசம்பட்டி நாலு ரோடு 'தோட்டத்து விருந்து' உணவகத்தில், மகனோடு எனக்கு எதிரில் அமர்ந்திருந்தார். 'வயித்துக்கு நல்லா சாப்பிடுங்க' என்று மகன் அவரிடம் அடிக்கடி சொல்லியது என் நினைவிற்கு வந்தது. உணவகத்தில்...

சுடச்சுட என் முன் 'தோட்டத்து விருந்து ஸ்பெஷல்' சிக்கன். சின்ன சின்னதாய் இருந்த நாட்டுக்கோழி துண்டுகள் வரமிளகாய், கடலை எண்ணெய் வாசத்துடன் சுண்டி இழுத்தது. பொன்னி அரிசி சோறுடன் பச்சைப்புளி ரசம் கலந்து சிக்கனை நான் ருசித்ததைப் பார்த்த தம்பி, அவர்களுக்கும் அதையே ஆர்டர் செய்தான். பெரியவர் ஒரு குழந்தை போல் சப்பு கொட்டி ருசித்தார். ரயில் நகரத் தொடங்கியது. 'உங்க மகன் வரலையா?' என்றேன்.

என்னை அடையாளம் கண்டு கொண்டவர், 'அது என் மகன் இல்லைம்மா; சென்னையில மகன் வீட்டுல மரியாதை இல்லைங்கிற கோபத்துல புறப்பட்டு இங்கே வந்துட்டேன். கடும் பசி. அந்த தம்பிதான் சாப்பாடு வாங்கித் தந்து, 'மகனோட மனசு விட்டு பேசுங்க; எல்லாம் சரியாயிரும்'னு ரயில் ஏத்தி விட்டு போச்சு!' என்றார்.

அவசரமாய் ஜன்னலுக்கு வெளியே பார்வையை பரப்பினேன். ஒரு 'கறுப்பு சட்டைக்காரன்' இளித்தான். 'ச்சீ...' என்றவாறு பார்வை திருப்பி பரபரப்பாய் தேடினேன்... ம்ஹும்! அந்த தம்பி நீங்களா?



தோட்டத்து விருந்து, ஈரோடு.

98427 42126






      Dinamalar
      Follow us