sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

நிலமும் நானும்

/

நிலமும் நானும்

நிலமும் நானும்

நிலமும் நானும்


PUBLISHED ON : ஜன 12, 2025

Google News

PUBLISHED ON : ஜன 12, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசிக்கும் சங்கர், 'திசு வளர்ப்பு' முறையில் வாழை கன்றுகளை உருவாக்கி தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் விற்பனை செய்கிறார். இனி, விவசாயிகளுடன் சங்கர்...

'வணக்கம். நானும் உங்களை மாதிரி விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்தான். என் கிராமமான கரியாகவுண்டனுார்ல ஒன்றரை ஏக்கர்ல மஞ்சள், வாழை, மா, தென்னை பயிரிடுவோம். அப்போ, பயிர்களை தாக்குற நோய்கள் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். பிளஸ் 2 பாடத்துல 'திசு வளர்ப்பு' பற்றி படிச்சதும் அது மேல ஒரு ஆர்வம்!

'தாவர உயிரி தொழில்நுட்பத்துல இளங்கலை முடிச்சேன். அப்புறம், 14 ஆண்டு அனுபவத்துல 'திசு வளர்ப்பு' சம்பந்தமான அறிவை வளர்த்துக்கிட்டேன். 2010ல் இருந்து செவ்வாழை, நேந்திரன், கற்பூரவள்ளி, பூவன், மொந்தன், ரஸ்தாளி, ஏலக்கி, காவேரி கல்கி, மலைவாழை உள்ளிட்ட 14 ரக வாழை கன்றுகளை 'திசு வளர்ப்பு' முறையில என் ஆய்வகத்துல உருவாக்குறேன்!'

'திசு வளர்ப்பு' முறை பற்றி எளிமையா சொல்லுங்க...

'இந்தமுறையில ஆரோக்கியமான வாழை மரத்துல முளைவிடுற பக்க கன்றை பிரிச்சு, அதன்மூலமா ஆய்வகத்துல புதிய கன்றுகள் உருவாக்கப்படுது. இந்த கன்றுகள் ஆய்வகத்துல 10 மாதங்களும், பண்ணையில மூன்று மாதங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுது!

'நம்ம பாரம்பரிய முறையில ஒரே வாழை கன்றுல இருந்து விளைச்சலை மறுபடி மறுபடி எடுக்குறதால பழங்களோட தரம் குறைஞ்சிடும். 'திசு வளர்ப்பு' முறையில 10 - 11 மாதங்களுக்குள்ளே விளைச்சல் பார்த்து புதிய கன்றுகளை நடவு செய்றதால பழங்களோட தரம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்!

'இம்முறையிலான வாழைகளை ஆறு வகையான வைரஸ் கிருமிகள் தீண்டாது. சீரான வாழைத்தார்கள் அறுவடைக்கு கிடைக்கிறதால நல்ல லாபம் கிடைக்கும். அழியுற நிலையில இருக்குற பாரம்பரிய வாழை ரகங்களை இதுல மீட்டெடுக்கலாம்!'

சங்கரிடம் வாழை கன்றுகளை பெற்று சாகுபடி செய்து வரும் சேலம், எடப்பாடியைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் சங்கருக்கு சொல்லும் நன்றி இப்படியாக இருக்கிறது...

'உங்க 'திசு வளர்ப்பு' வாழையில கிருமி தாக்குதல் இல்லை. வாழைகள் மிகச்சரியா ஆறாவது மாதத்துல புடை தள்ளி, 10வது மாதத்துல வெட்டுக்கு வந்திருது! இந்த கன்றுகளோட வேர் இலகுவாக இருக்குறதால களையெடுக்குறப்போ மட்டும் கவனமா இருக்க வேண்டியிருக்கு. 'திசு வளர்ப்பு' வாழை, 'சொட்டுநீர்' பாசனத்துல என் விவசாயத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திஇருக்கு; நன்றி!'

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

80127 02500






      Dinamalar
      Follow us