PUBLISHED ON : ஜன 12, 2025

செய்தி: சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் ஒப்பந்த பணியில் தொழிலாளி பலி!
அநீதி: பலியான கனகராஜின் குடும்பத்தினருக்கு 20 மாதங்களாகியும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை!
'தமிழக அரசே... உன் மனம் என்ன கல்லா; எங்களுக்காக இளக மாட்டாயா?' - கனகராஜின் தாய் குப்பு!
நான் கனகராஜோட அப்பா நடராஜன். ஏப்ரல் 13, 2023 காலையில சேப்பாக்கம், மசூதி தெரு மழைநீர் கால்வாய் கட்டுமான வேலைக்குப் போன என் மகன் சடலமாத்தான் எங்களுக்கு கிடைச்சான்!
அய்யா... நான் கனகராஜோட தம்பி தனசேகரன். என் அண்ணனோட மரணம் டி1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்துல முதல் தகவல் அறிக்கை எண்: 189/2023ல் பதிவாகி இருக்கு. 'ரத்தக்கசிவு அதிர்ச்சியால் மரணம்'னு மருத்துவ அறிக்கை சொல்லுது!
'பட்டியலின தொழிலாளி கனகராஜ் இறப்புக்கு நீதி கேட்டு சென்னை, மாநகராட்சி ஆணையர்கிட்டே ஏப்ரல் 17, 2023ல் மனு கொடுத்தோம்; பிரயோஜனம் இல்லை!' - த.சித்தார்த்தன், எழும்பூர் பகுதிக்குழு உறுப்பினர், மா.கம்யூ., 'மே 18, 2023ல் மாநகராட்சி அலுவலக வளாகத்துல போராட்டம் பண்ணி ஆணையர்கிட்டே மனு கொடுத்தோம்; ஆகஸ்ட் 17ம் தேதி போராட்டத்துல கைதானோம்; நீதி கிடைக்கலை!' - ஜி.செல்வா, மத்திய சென்னை செயலர், மா.கம்யூ., அரசே... எமக்கு நீதி வழங்கு!