
அரசியலில் நீண்ட காலம் உழைத்து படிப்படியாக முன்னேறி இருக்கும் துணை முதல்வரே... ஆவலுடன் பதில் கேட்கிறது தமிழகம்!
1. மிகச்சிறந்த நடிகரான நீங்கள் விலகியபின் திரைத்துறையில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக உணர்கிறீர்களா?
2. பாலியல் வழக்கு விசாரணையில் ஞானசேகரனின் திருட்டுகள் அம்பலப்பட்டது போல், தமிழகத்தில் கைதாகும் ஆசிரியர், காவல் அதிகாரி உள்ளிட்டோரின் கடந்த காலங்கள் தோண்டி எடுக்கப்படுமா?
3. 'கருணாநிதியும் ஸ்டாலினும் சிறை கண்டபின் தான் சிறை வசதிகள் மேம்பட்டன' என்கிறீர்களே... குடிப்பழக்கத்தால் சீரழிந்த குடும்பங்களை சந்திக்கும் திட்டம் முதல்வரிடம் உண்டா?
4. 'தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றும்' என அரசு ஊழியர்கள் நம்புவது போல், 'தமிழக மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது' எனும் மத்திய அரசின் வாக்குறுதியை நம்புவதில் அரசுக்கு என்ன தயக்கம்?
5. 'இந்த ஆட்சியில் 2,634 கோவில்கள் கும்பாபிஷேகம் கண்டுள்ளன' என அமைச்சர் சேகர்பாபு தரும் துல்லிய விபரம் போல், 'பள்ளிகளில் பதிவான 'போக்சோ' வழக்குகள் இத்தனை' எனும் விபரம் வெளியாகுமா?
6. 'மும்மொழி கொள்கையை ஏற்கிறோம்; ஆனால், மூன்றாவது மொழியாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமே கற்போம்' என்று சொல்லியும் எதிர்ப்பை காட்டலாம்தானே?
7. முதல்வராக தான் பதவியேற்ற விழாவிற்கு கூட குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்லாத அண்ணாதுரையின் நாகரிகத்தை பின்பற்றும் தமிழகஅரசியல்வாதி யார்?
7½ அந்த 'ரகசியம்' பற்றி...?