
ஈ.வெ.ரா., பாதையில் பயணிப்பதாகச் சொல்லியபடியே, 3,100க்கும் மேற்பட்ட கும்பாபிேஷகங்களை நிகழ்த்தியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பதில் கேட்கிறது தமிழகம்!
1. மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாய், நீங்கள் விசாரித்து அறியாத எந்த உண்மையை, சி.பி.ஐ., வந்து விசாரித்துச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
2. 'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ...' என்றல்லாமல், அண்ணா பல்கலை மாணவி பாலியல் குற்ற வழக்கில் தன்னிடம் வலுவான ஆதாரம் உள்ளதாகச் சொன்ன பா.ஜ., அண்ணாமலையிடம் அவற்றை கேட்டுப் பெறுவீர்களா?
3. 'தி.மு.க., ஆட்சிக்கு எதிராக விமர்சனத்தை முன்வைக்காததற்கு கருணாநிதிக்கு அளித்த சத்தியமே காரணம்' என்கிறார் வைகோ; இதனை, 'நல்லாட்சி நடத்துகிறார் ஸ்டாலின்' எனும் அவரது பாராட்டாகவா உணர்கிறீர்கள்?
4. 'போலீஸ்தான் குற்றவாளி என்றாலும் தண்டனை பெற்றுத் தந்து தி.மு.க., ஆட்சியில் நீதி நிலைநாட்டப்படுகிறது' என்கிறீர்களே... குற்றம் புரிவதற்கான சூழலை ஒரு காவலருக்கு தரும் ஆட்சி, நிர்வாகத்திறன் மிக்க ஆட்சியா?
5. 'யாரேனும் கடமை தவறினால் சர்வாதிகாரியாக மாறுவேன்' என்று சொன்ன நீங்களே அவ்வாறு நடந்து கொள்ளாத போது, மடப்புரம் நிகழ்வை 'அரச பயங்கரவாதம்' என்று திருமாவளவன் சொன்னதில் மனம் உடைந்தீர்களா?
6. 'எந்த நெருக்கடியிலும் தமிழகத்தின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா' எனும் உங்களது 'ஓரணியில் தமிழ்நாடு' கேள்விக்கு, 'டாஸ்மாக்கில் இருந்து தமிழன் காப்பாற்றப்பட வேண்டும்' என்று பதில் வந்ததா?
7. 'தேக்கி வைக்க தமிழகத்தில் போதிய அணைகள் இல்லாததால் நாங்கள் விடுவிக்கும் காவிரி கடலுக்கு செல்கிறது' என்று கர்நாடக முதல்வர் சொன்னதும் மனம் வலித்தது; எங்கள் மனவலிக்கு காரணமானவர்கள் யார் சார்?
7½ 'இது சிறப்பான ஆட்சி' எனில், 2026ல் கூட்டணி அவசியமா?

