
'அதே டெய் லர், அதே வாடகை' எனும் வகையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் தந்திருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் பழனிசாமியிடம், அடுத்த கட்ட வாக்குறுதிகள் தொடர்பாய் தமிழகம் எழுப்பும் கேள்விகள் இவை...
1. 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒன்பது மாதங்களில் 81 ஆக இருந்த கோவில் கும்பாபிஷேக எண்ணிக்கை, 4,000 எனும் உச்சம் தொட்டு இருக்கும் விதம் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்படும்' - பக்தர்களுக்கு இத்தெளிவு தருவீர்களா?
2. 'நேர்மை, ஒழுக்கம் நி றைந்தவர்கள் மட்டுமே சட்டம் - ஒழுங்கு பிரிவில் நியமிக்கப்பட வேண்டும்' என்று 2022ல் உயர் நீதிமன்றம் டி.ஜி.பி.,க்கு பிறப்பித்த உத்தரவு தீவிரமாய் அமல்படுத்தப்படும்' - இப்படி சத்தியம் செய்வீர்களா?
3. 'இதுவரையில், 'போக்சோ'வில் சிக்கிய பள்ளி ஆசிரியர்களின் விபரமும், தண்டனை விபரமும் எங்கள் அரசு பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கப்படும்' - கொதிக்கும் தமிழக மனங்களை இப்படி குளிர்விப்பீர்களா?
4. 'கரூரின் 41 உயிர்களுக்கு நீதி தேடுவது போல, திருச்செந்துார் முருகன் கோவில் கூட்டத்தில் 2025ல் பலியான சிவகங்கை பக்தரின் மரணத்திற்கு நீதி தருவோம்' - ஓம்குமாரின் குடும்பத்தினருக்கு இ ப்படி ஒரு நிம்மதி தருவீர்களா?
5. 'தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பது போல், தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் 'மும்மொழி கற்கும் வாய்ப்பு' எமது ஆட்சியில் நிச்சயம் கிடைக்கும்' - இப்படிச் சொல்லி ஏழைப் பிள்ளைகளின் ஏக்கம் தணிப்பீர்களா?
6. 'அலுவல க வளாகங்களில ் கூட்டம் நடத்தவோ, உரை நிகழ்த்தவோ கூடாது என, 2025ல் நன்னடத்தை விதிகளில் செய்யப்பட்ட திருத்தம் வாபஸ் பெறப்படும்' - தமிழக அரசு ஊழியர்களுக்கு இப்படியான இனிப்பு ஊட்டுவீர்களா?
7. 'தி.மு.க., ஆட்சியில் 'ஆக்கிரமிப்பு அகற்றம்' என்பதாக இடித்து தள்ளப்பட்ட கோவில் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்கள் எண்ணிக்கை, ஆட்சி பொறுப்பேற்ற 48 மணி நேரத்தில் வெளியிடப்படும்' - இப்படி ஆறுதல் தருவீர்களா?
7 ½ 'யார் அந்த சார்' - விடை சொல்வ தாக சொல்வீர்களா?

