PUBLISHED ON : ஜன 25, 2026

தேசிய திறனாய்வுத் தேர்வில் 12 ஆண்டுகளாக சாதித்து வருகிறது, 130 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட பெருகவாழ்ந்தான் அரசுப்பள்ளி!
பள்ளி: திருவாரூர், கோட்டூரிலுள்ள இந்த நடுநிலைப் பள்ளியில், 2013 - 14ம் கல்வியாண்டு முதல் தற்போது வரை, 62 பேர் இத்தேர்வில் சாதித்து உள்ளனர். இங்கு படித்த ஐந்து பேர் தற்போது மருத்துவ மாணவர்களாக இருக்கின்றனர். சுற்றியுள்ள சித்தமல்லி, செருகளத்துார், காந்தாரி கிராமத்து பிள்ளைகள் இப்பள்ளியில் ஆர்வமுடன் சேர்கின்றனர்.
பெருமை: 'தமிழ் எனக்குப் பிடிக்கும்; தமிழில் மேடையேறி முழங்குவது இன்னும் பிடிக்கும்; இந்த ஆசையை குழந்தைகள் / ஆசிரியர் தினத்தில் நிறைவேற்றித் தந்தது என் பள்ளி; இதோடு, தமிழ் வளர்ச்சித் துறையின் ' திருக்குறள் முற்றோதல்' திட்டத்தில் என் பெயரை பரிந்துரை செய்திருக்கிறது; என் பள்ளிக்கு நான் நிச்சயம் பெருமை சேர்ப்பேன்!'
வி.சுபஷிதா, 6 ம் வகுப்பு
கோரிக்கை: 'கேரம், செஸ் உள்ளிட்ட போட்டிகளில் ஒன்றிய அளவில்
சாதித்திருக்கின்றனர் என் பள்ளி மாணவர்கள். முழுநேர உடற்கல்வி ஆசிரியர்
நியமிக்கப்பட்டு விட்டால் அனைத்து விளையாட்டுகளிலும் எங்கள் மாணவர்கள்
சாதிப்பது நிச்சயம். அதேபோல், முழுநேர துாய்மைப் பணியாளர் இருந்தால் 267
மாணவர்களின் ஆரோக்கியம் மேம்படும்!'
கா.லட்சுமி, தலைமை ஆசிரியை

