தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : பிப் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இலவசமாக ஒ ன்றைத் தருகின்றனர் என்றால் அங்கே வாங்கப்படும் பொருள் நாம்தான்' எனும் 'சுரீர்ர்ர்ர்...' உண்மையை சமீபகாலமாய் உணர்ந்து வரும் தமிழினம், மீண்டும் மீண்டும் பத்து 500 ரூபாய் நோட்டுகளை எண்ணியபடியே சந்திப்போரிடம் பரிமாறிக் கொள்ளும் கேள்விகள் இ வை...

1. 'தி.மு.க., ஆள்வதை நாங்கள் பெற்ற அதிகாரமாக நினைக்கிறோம்' என்று காதர் மொய்தீன் சொல்வது போல், 'பா.ஜ., இந்தியாவை ஆள்வதை எங்கள் கவுரவமாக நினைக்கிறோம்' என்று நாம் சொல்ல மறுப்பது ஏன் கந்தா?

2. 'என்னைப் போல் சுயமாக கட்சி ஆரம்பித்தவரா நீங்கள்' என்று த.வெ.க., தலைவர் கேட்டபின்னும், 'அந்த குடும்ப வாரிசுகளால் மட்டுமே என்னை வழிநடத்த முடியும்' என்று கிடப்பவன்... பகுத்தறிவாளனா, சுயமரியாதைக்காரனா?

3. 'பெண்கள் வா ழ்வில் முன்னேற்றம்; ஸ்டாலின் அரசின் உத்தரவாதம்' என்ற தமிழக அரசின் விளம்பரம், 'நாட்டில் 90 சதவீதம் ஆண்களே முதல்வர்' என்று முதல்வரின் தங்கை கனிமொழி விமர்சித்ததை எனக்கு நினைவூட்டுவது ஏன்?

4. மடப்பு ரம் அஜித்குமார் மீதான நகை திருட்டு புகாரே பொய் - ஜனநாயகத்தை பாதுகாக்க எமர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியை இழந்த இயக்கம் தி.மு.க.; இந்த இரண்டு செய்திகளும் தொடர்பற்றவை தானே என் மழுங்கிய மூளை யே?

5. 'பிற மாநிலங்களைப் பின்பற் றி 'டெட்' தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு' என்று சொன்ன தமிழக அரசு, 'டில்லியில் 2019ல் அறிமுகமான மகளிர் இலவச பேருந்து பயணமே 2021ல் இங்கு துவக்கப்பட்டது' எனச் சொன்னதுண்டா?

6. 'தி.மு.க.,வும் நானும் இருக்கும்வரை தமிழக மக்களுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர முடியாது' என்ற முதல்வரின் கர்ஜனையை, தங்கள் நிலம் காக்கப் போராடும் பரந்துார் மக்கள் என்னவாகப் புரிந்து கொள்வர்?

7. போதைக்கு அடிமையானவர்களை மீட்க முதல்வர் திறந்து வைத்த, 'கலங்கரை' ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை மறக்க, நான் 'டாஸ்மாக்'கிற்கு செல்கிறேன்; நீயும் வரு கிறாயா நண்பா?

7 ½ உப்பு கிலோ என்ன விலை?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us