PUBLISHED ON : நவ 09, 2025

திருவாரூர், மன்னார்குடி - முத்துப்பேட்டை வழியில் பசுமைமிகு பெருக வாழ்ந்தான் கிராமம்; இதன் முக்கியமான மூன்று அடையாளங்கள்...
மட்பாண்டம், பங்குனி மாத குதிரையெடுப்பு திருவிழா, திருக்காரியப்ப அய்யனாருக்கு ஏழாவது தலைமுறையாக மண்குதிரை வார்க்கும் 69 வயது ரங்கசாமி வேளார்!
ஐம்பது ஆண்டு காலமாக மண் பிசையும் ரங்கசாமி வேளார், காலத்தை பிசைந்து தன் ஞாபகங்களை வடித்த அழகிய தருணம் இது...
அப்பாவுக்கு மரியாதை
'வேளார்'ங்கி றது குயவரோட உட்பிரிவுங்க; எங்கப்பா முத்துக் காரி வேளார், களிமண் பிசைஞ்சு எதை வடிச்சாலும் அதுல அவ்வளவு துல்லியம், நுணுக்கம் இருக்கும். பணமில்லாம பொருள் கேட்டு யார் வந்து நின்னாலும், 'இந்தா கொண்டு போ'ன்னு அவர் கொடுத்திருவார்; 'மனசுதான்டா நம்ம கடவுள்'னு சொல்லுவார்!
அவர் இறந்தப் போ வயசு, 81; அன்னைக்கு திருவிழாவோட எட் டாவது நாள்; குதிரை சிலை வடிச்சுட்டு இருக்குறப்போ உயிர் பிரிஞ்சிருச்சு! உடனே, திருவிழாவை ஊர்க்காரங்க நிறுத்திட்டாங்க. சத்தியமா சொல்றேன்... அந்த நாளையும் அப்பாவுக்கு கிடைச்ச இறுதி மரியாதையையும் என்னால மறக்கவே மு டியாது!
திருவிழா நேரங்கள்ல மண் குதிரைக்கு முன்னால, அய்யனார் மாதிரி அப்பா வர்ற காட்சி மனசுல இன்னும் பத்திரமா இருக்கு!
'அப்பாவின் கலை நுணுக்கத்துடன் 12 அடி உயரத்தில் ரங்கசாமி வேளார் வார்த்தெடுக்கும் களிமண் குதிரை, பிரமாண்ட சூளைக்குள் சுட்டெடுக்கப்பட்டு, 'பஞ்சவர்ண குதிரை'யாய் மாறும் வித்தையைக் காண திரண்டு நிற்போம்!' என்கிறது 'பட்டு வேளார்' என முத்துக்காரி வேளாரை இன்றும் போற்றும் ஊர்!
குதிரைக்கு பெயர் சூட்டிய விழா
அது, 1982ன்னு நினைக்கிறேன்; அதுவும், ஒரு திருவிழா நேரம்தான். ஒரு பிரெஞ்சுக்காரரை அழைச்சுக்கிட்டு இ ரண்டு பேர் அப்பாவை பார்க்க வந்திருந்தாங்க! வந்தவங்ககிட்டே பாமணி ஆற்று களிமண், கோரையாற்று மணல் கலவை, சிலைக்கு பூசப்படுற இயற்கை நிறங்கள், சிலை திடத்துக்காக சேர்க்குற பசுஞ்சாணம் எல்லாத்தையும் விவரமா அப்பா எடுத்துச் சொன்னார்!
விளக்குகள் வெளிச்சத்துல ஜொலிக்கிற திருவிழாவைப் பார்த்த அவங்க, 'மன்னர்கள் காலத்து போர்க் கள ஆயத்த காட்சி மாதிரி இருக்கு'ன்னு சொல்லி, எங்க மண்குதிரைக்கு 'பஞ்சவர்ண குதிரை'ன்னு பெயர் சூட்டிட்டாங்க. வந்ததுல ஒருத்தர்... தமிழக தொல்லியல் அறிஞரான ரா.நாகசாமி அய்யா; அந்த இன்னொருத்தர்... குடவாயில் பால சுப்ரமணியன் அய்யா!
இது பெருமை அல்ல... பலம்!
டிசம்பர், 1983; வெள்ளத்துல என் சூளை மொத்தமும் நாசம்; இரண்டே மாசத்துல திருவிழா; தடத டன்னு சூளையை தயார் பண்ணி திருவிழாவுக்கு குதிரை செஞ்சிட்டேன். ஆச்சு... 42 வருஷம்; இந்தா... எப்படி நிற்குது பாருங்க என் சூளை!
சில ஞாபகங்கள் வாழ்வை ருசியாக்கும்; ரங்கசாமி வேளாருக்கு எல்லா ஞாபகங்களுமே அப்படித்தான்!

