PUBLISHED ON : நவ 09, 2025

இந்த ராத்திரியில இப்படி நாம சுத்துறது பயமா இருக்கு ஜானு; இங்கே, உனக்கு பாதுகாப்பில்ல!
என்ன பயம்... அதான் நீ என்கூட இருக்குறேல்ல ராம்!
என்னை வெட்டிட்டு உன்னை துாக்கிட்டுப் போயிருவானுங்க ஜானு; நாம அழுது கண்ணீர் விடுறப்போ, 'ராத்திரி 11:00 மணிக்கு அவ ஏன்டா ரோட்டுல சுத்திட்டு இருந்தா'ன்னு கேட்பானுங்க; உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகமா இருக்குற மாநிலம்... மேதாவிகளோட கேள்விகள் பயங்கரமா இருக்கும் ஜானு!
ஏன் ராம்... 'பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்'னு முதல்வர் அடிக்கடி சொல்றாரே... அதை நீ நம்பலையா?
அய்யோ... அதெல்லாம் பாதுகாப்பா வீட்டுக்குள்ளே இருக்குற பெண்களுக்கு ஜானு; 'முதல்வர் சொல்லிட்டாரே...'ன்னு நம்பிக்கையா வெளியில சுத்துற பொண்ணுங்களுக்கு இல்ல! ப்ப்ப்ச்ச்... சிங்கப்பூர்க்காரி உனக்கெதுக்கு இதெல்லாம்; சீக்கிரம் நட... நாம போயிரலாம்!
என்ன ராம் இது... ஒரே ஒரு கோயம்புத்துார் பிரச்னைக்கு இப்படியா அலறுவே?
உனக்குத் தெரியாது ஜானு; இந்த மே மாசம், கும்பகோணத்துல 34 வயசு பெண்ணுக்கும் இதேமாதிரியான கொடுமை நடந்தது; ஆனா, அது இந்தளவுக்கு பேசப்படலை. இங்கே, எது வெளிச்சத்துக்கு வருதோ... அதுதான் குற்றம்... அது மட்டும்தான் குற்றம்!
ஆனா, அதுலகூட சம்பந்தப்பட்டவங்களை பிடிச்சாச்சுன்னு கேள்விப்பட்டேனே ராம்?
ம்ஹும்... ஜானு... 'காவல்'ங்கிறதுக்கு அர்த்தம் காயம் படாம காப்பாத்துறது; காயப்படுத்தினவனை கைது பண்றதில்லை! 'குற்றம் நடக்காம தடுக்குறதுதான் காவல் துறையின் பணி'ன்னு எங்க முதல்வர் கூட அடிக்கடி சொல்வாரு!
அப்போ நீ... இங்கே யார் சொல்றதையும் நம்புறதில்லையா ராம்?
அப்படி இல்ல ஜானு... 'நாட்டின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்'னு சமீபத்துல ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் சொன்னாரு இல்லையா... அதை நான் ஆணித்தரமா நம்புறேன். ஏய்... என்ன... ஜானு... ஏன் அப்படி பார்க்குறே?
நீ சொன்னது சரிதான் ராம்... நீ இன்னும் மாறலை; அங்கேயே தான் நிற்கிறே!

