PUBLISHED ON : நவ 09, 2025

'நடந்தது இதுதான்' என காக்கிகள் உருட்டுவதைக் காட்டிலும் பயங்கரமான கதை!
இந்த படத்துல நோ போலீஸ்; ஒன்லி ஹீரோ! இந்த ஹீரோ பையனுக்கும், ஒரு பொண்ணுக்கும் பரஸ்பர சம்மதத்தோட கசமுசா ஆயிருது; 'சம்பவம்' நடந்த கொஞ்சநாள் கழிச்சு அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்குது; இப்போ, அந்த பொண்ணுதான் பேய்!
நமக்கு பழக்கப்பட்ட பேய்ங்க மாதிரிதான் இதுவும்; கொஞ்சமும் பொறுப்பில்லாம ஆள் இல்லாத இடத்துல தண்ணியை திறந்து விடுறது, லைட்டை போடுறது, ஜன்னல் கதவை திறக்கிறது, முடியை கலைச்சு விடுறதுன்னு ஒரே அழிச் சாட்டியம்! இதுல வெறுப்பாகுற ஹீரோ பிரணவ், 'என் மயிரு இருந்தாத்தானே நீ இப்படி பண்ணுவே'ன்னு 'ட்ரிம்மர்' எடுத்து தலையை வழிச்சுடுறாப்ல!
இங்கே டுவிஸ்ட்... அந்த பேயி அவரு நினைச்ச பொண்ணு இல்லை; அது, ஆம்பளை பே ய்; 'அய்யோ... அநியாயமா உன் அழகு மயிரு போச்சேடா...'ன்னு வருத்தப்பட வைக்குது இடைவேளை; அந்த ஆம்பளை பேய் யாரு?
பிரணவ் தன் வீட்டுக்குள்ளே 'ஸ்மார்ட்போன்' வெளிச்சத்துல பேயைத் தேடுறப்போ மட்டும் நமக்குள்ளே குளிர் ஏறுதே தவிர, இடைவேளை வரைக்கும் செம வெக்கை! அதுக்கப்புறம், 'ஆம்பளை பேய் யாரு'ன்னு தேடுறதும், அதுக்கு ஒரு காதல் கதை சொல்றதும், 'அப்பாடா... பேய் போயிருச்சு'ன்னு பிரணவ் கிளம்புறப்போ...
மறுபடியும் ஒரு பொம்பளை பேய்; நல்லவேளை... இத்தோட படம் முடிஞ்சிருச்சு; 'புதுப்பேய் யாரு'ன்னு அடுத்த பாகத்துல தேடுவானுங்களோ என்னவோ!
இம்மாதிரி படங்கள்ல, கேமரா ஒரு இடத்தை காமிக்கிறதை விட, அந்த இடம் தன்னை கேமராகிட்டே காட்டிக்கிற மாதிரி தெரியணும்; ஒலியும், நிசப்தமும் மாறி மாறி வந்து 'இங் க ஏதோ இருக்கு'ன்னு நம்ப வைக்கணும்.
'போதுமே... இந்த ரெண்டு துண்டு ஊறுகாய் போதுமே...'ன்னா, இது செம 'திகில்' சரக்கு.
ஆக...
பயங்கர போதை, கொலை, பலாத்கார செய்திகளுக்கு பழக்கப்பட்டுள்ள தமிழனை இப்படைப்பு அசைக்காது!

