
'சமூக அக்கறையை அரசியல்வாதிகளின் உரையில்தான் உணர முடியும்; வாழ்க்கையின்
மேடு பள்ளங்களை திரை நட்சத்திரங்களின் பேட்டியில்தான் படிக்க முடியும்'
என்பதை ஏற்காத இவர்கள், சென்னை, துவாரகா தாஸ் கோவர்தன் தா ஸ் வைஷ்ணவா
கல்லுாரியின் இளநிலை மாணவர்கள்!
சமூகத்தையும், வாழ்க்கையையும் இவர்கள் யார் வழி அறிகின்றனர்?
'உன் பாட மதிப்பெண்கள்கல்வியில் உன் நிலையைச் சொல்லும்; சக மனிதர்களுடன் பழகுவதில், முடிவுகள் எடுப்பதில், கசப்புகளை கடந்து வருவதில் நீ எடுக்கும் மதிப்பெண்கள்தான் உன் வாழ்க்கையில் உன் நிலையைச் சொல்லும் என என்னை வழி நடத்தும் என் அம்மா மஞ்சுளா தான் என் வழிகாட்டி!'
வே.தேஜஸ்வி, வணிகவியல்.
'எதிலும் குறுக்குவழியை நாடாதே; மூளைக்கான வேலையில் அரைத்த மாவையே மீண்டும் அரைப்பது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பது எங்கள் கல்லுாரி முதல்வர் சந்தோஷ் பாபுவின் அறிவுரை! 'ஆய்வுகள் மூலம் கிடைக்கும் சிந்தனைதான் அசல் வளர்ச்சி' எனச் சொல்லும் அவரே என் குரு!'
த.அன்பழகன், வணிகவியல்
'வங்கியில் 1,500 ரூபாய் ஊதியத்தில் இணைந்த என் அப்பா சுப்பிரமணியன் இன்று கூடுதல் பொது மேலாளர்; ஊழியர்களுக்காக சங்கம் அமைத்து உரிமைகள் கிடைக்க முக்கிய பங்காற்றி இருக்கிறார். அவரது இந்த செயல்பாடே குடிமைப் ப ணி மீதான என் ஆர்வத்திற்கு காரணம்; என் அப்பாவே என் ஹீரோ!'
சு.அருண்துரை, பொருளாதாரம்

