sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

சிலை வியக்கும் சிற்பி

/

சிலை வியக்கும் சிற்பி

சிலை வியக்கும் சிற்பி

சிலை வியக்கும் சிற்பி


PUBLISHED ON : ஜூலை 13, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனது ஆசிரியர் ராமநாதனின் வலது கரம் தனது தோள் மீது படர்ந்து தரும் நம்பிக்கை உணர்வில் கம்பீரமாய் நிற்கிறார் இம்மாணவர்!

இந்த வார...சிலை: வி.கிஷோர், பிளஸ் 2

சிற்பி: ராமநாதன்,

மதிப்புக்கல்வி ஆசிரியர்

கருவறை: சேரன் வித்யாலயா

மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

சின்னாளபட்டி, திண்டுக்கல்.

சிலையின் மொழி

தேர்வுல கேள்வியை உள்வாங்காம பதில் எழுதி மதிப்பெண் இழந்திருவேன்; கவனச்சிதறலால சுலபமான பாடத்தைக்கூட நிறைய நேரம் செலவழிச்சு படிப்பேன்; தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டேன்; சுயகட்டுப்பாடு இல்லாம பேசுவேன்; இதெல்லாம் ஒன்பதாம் வகுப்பு வரை என்கிட்டே இருந்த பிரச்னைகள்!

இதைப்பற்றி ராமநாதன் சார்கிட்டே ஒருநாள் மனசுவிட்டு பேசினேன். அவர் என்கிட்டே ஏற்படுத்தின முதல் மாற்றம் தலைமுடிக்கு எண்ணெய் வைக்கிறது; அது என் உடல் நலன்ல நிறைய நன்மைகளை ஏற்படுத்துச்சு. நானே என்னை சரிபண்ணிக்க முடியும்ங்கிற நம்பிக்கையை இப்படித்தான் அவர் எனக்கு ஊட்ட ஆரம்பிச்சார்!

ஏட்டுக்கல்வி தாண்டி மாணவர்களிடம் நல்ல எண்ணங்களை உருவாக்குவதும், எதிர்மறை உணர்வுகளை களைவதும் ஆசிரியர் ராமநாதனின் பணி. யோகாவில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் இவர் அதன்வழி மாணவர்களிடம் புத்துணர்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

சார் தந்த மதிப்புமிக்க பரிசு?

என் நிலையில்லா குணத்தால நண்பர்களோட நல்ல முறையில நேரம் செலவழிக்க முடியாம இருந்தது. வேலைக்கு கிளம்பிக்கிட்டே என்னையும் தங்கச்சியையும் ஸ்கூலுக்கு தயார்படுத்துறது அம்மாவுக்கு பெரிய சுமையா இருந்ததைக்கூட நான் புரிஞ்சுக்கலை. இதை தெரிஞ்சுக்கிட்ட ராமநாதன் சார் எனக்குன்னு கூடுதல் நேரம் ஒதுக்கி யோகா, தியான பயிற்சி கொடுத்தார். எனக்குள்ளே மாற்றத்தை உணர ஆரம்பிச்சேன்.

இப்போ, நிறைய நண்பர்கள் என்கூட பழகுறாங்க. பாடத்துல இருக்குற சந்தேகங்களை கேட்குறாங்க. காலையில எனக்கும் தங்கச்சிக்கும் டிபன் பாக்ஸ்ல நானே சாப்பாடு நிரப்பிக்கிறதால, அம்மா ரிலாக்ஸா வேலைக்கு கிளம்புறாங்க. சார் தந்த பரிசுகள்ல மதிப்பிட முடியாததுன்னா எனக்குள்ளே ஏற்பட்ட இந்த மாற்றம்தான்!

மதிப்புக்கல்வி ஆசிரியராக ராமநாதனுக்கு இது 25வது ஆண்டு. கடந்த 10 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

உங்க சாருக்கு நீங்க கொடுக்க விரும்புற பரிசு?

'வி.கிஷோர், விண்வெளி ஆராய்ச்சியாளர்' எனும் அடையாளம்.

உளியின் மொழி

'மனித ஆற்றலை ஒருமுகப்படுத்த மனசுல இருந்து கழிக்க வேண்டியது என்ன; சேர்க்க வேண்டியது என்னன்னு மாணவர்களுக்கு புரிய வைக்கிறேன். இந்த தேசத்தோட வளர்ச்சிப் பாதையை தீர்மானிக்கிற அதிகார பொறுப்புகள்ல என் மாணவர்கள் இருக்கணும்னு ஆசைப்படுறேன்!' - ஆசிரியர் மு.ராமநாதன்.






      Dinamalar
      Follow us