PUBLISHED ON : டிச 22, 2024

'நாம எடுக்குற ப்ரீ - வெட்டிங், போஸ்ட் - வெட்டிங் போட்டோ ஷூட் பார்த்து எல்லாரும் வாயை பிளக்கணும்; என்ன... புரிஞ்சுதா?'
மனைவியாகப் போற காதலி இப்படி சொன்னதும் கணவனாகப் போற காதலன் சட்டுன்னு யோசிச்சு பட்டுன்னு அழைச்சிட்டுப் போன இடம்... செங்கல்பட்டு, நெம்மேலியில இருக்குற கோஸ்டல் அவென்யூ.
'எங்களுக்கு ஈபிள் டவர் முன்னால நின்னு, ஜோடியா கைகளை குவிச்சு இதய வடிவம் காட்டுற மாதிரி போஸ் கொடுக்கணும்னு ஆசை!'
'அதுக்கென்ன... இதோ, 60 அடி உயரத்துல எங்க ஈபிள் டவர் இருக்கு. நீங்க 50 மீட்டர் துாரத்துல நின்னு விதவிதமா போஸ் கொடுங்க. உங்க ஆசை ஒளி ஓவியமாயிடும்!' - உரிமையாளர் குமார்.
'வாவ்... சத்தியமா இதை நாங்க எதிர்பார்க்கலை சார்'
'இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி... கேரளத்து வீடு, செட்டிநாடு வீடு, கிணறு இருக்குற கிராமத்து வீடுன்னு, ஒரு ஏக்கர்ல வெஸ்டர்ன், கிளாஸிக்கல், மாடர்ன், லைட்டிங்னு நாலு தீம் அடிப்படையில, 35 வகையான போட்டோ ஷுட் பின்னணிகளை வடிவமைச்சிருக்கோம். உங்க குழுவினர் தங்க எட்டு 'ஏசி' அறைகள் இருக்குது. ஒரு ரவுண்டு எல்லாத்தையும் பார்த்துட்டு வாங்க... போங்க!'
'சார்... பார்த்துட்டோம்... எல்லாமே மனசை சுண்டி இழுக்குது; குறிப்பா, அந்த பிறைநிலா! சார்... வர்ற ஞாயிற்றுக்கிழமை முழுநாள் எங்களுக்கு வேணும்; புக் பண்ணிக்கோங்க!'
கெட்டி மேளம்... கெட்டி மேளம்...