PUBLISHED ON : பிப் 09, 2025

கேலிச்சித்திரங்கள் வழியாக குறும்படம் போல மணமக்களின் பின்னணியை அழைப்பிதழில் சொல்கிறது தாம்பரம் 'கிரியேட்டிவ் வெட்டிங் கார்ட்ஸ்' விற்பனையகம்.
இனி, உரிமையாளர் மாதேஷுடன் மணமக்கள் ஆகவிருக்கும் ஒரு ஜோடி...
'சீட்டுக்கட்டு, வார இதழ் முகப்பு, சினிமா போஸ்டர், கடவுச்சீட்டுன்னு 980 வகைகள்ல அழைப்பிதழ்கள் தயார் பண்றோம்.
எழுத்துக்கள்ல பிசிறு தட்டிடாம இருக்க, 300 ஜி.எஸ்.எம்., அட்டையை பயன்படுத்துறோம். க்ளாஸி, மேட் பினிஷ் அட்டைகள்ல 'தெர்மல் லாமினேஷன்' பண்றதால சுருக்கம் விழாது!'
'எங்களுக்கு 'கேரிகேட்சர்' கான்செப்ட்ல, எங்க புகைப்படங்களை பயன்படுத்தணும்!'
'அப்போ 120 ஜி.எஸ்.எம்., டிரேசிங் தாள்ல உங்க புகைப்படத்தை 'டிஜிட்டல்' பிரின்ட் பண்ணணும்; அவ்வளவுதான்!'
'கவர்ல ஏதாவது வித்தியாசம்...'
'அடடா... அதுக்கு வாய்ப்பில்லையே! நாங்க தயார் பண்ற அழைப்பிதழ்களுக்கு உறை கிடையாது. அதுக்கு பதிலா பெயர், முகவரி எழுத பிரத்யேக இடம் தர்றோம். 'போஸ்ட் கார்டு' அளவுல இருந்து 'ஏ3' அளவு வரைக்கும் வெறும் 50 பத்திரிகை போதும்னாலும் கிடைக்கும்!'
'வாவ்... செம; போட்டோைஸ 'வாட்ஸ் ஆப்' பண்ணிடுறோம். பத்திரிகை எப்போ தயாராகும்?'
'ஒரு மாதம் ஆகும்; தயாரானதும் உங்களுக்கு அழைப்பு வரும்!'
கெட்டி மேளம்... கெட்டி மேளம்...
89399 13282