PUBLISHED ON : செப் 14, 2025

வழக்கமான பத்தோடு பதினொன்று வகை படமாக இருந்திருந்தால், கடந்த வாரம் சிவகார்த்திகேயனுக்கு 'மொய்' வைத்தது போல, இவ்வாரம் ஜி.வி.பிரகாஷுக்கு மொய் எழுதிவிட்டு பேசாமல் வந்திருக்கலாம்! ஆனால், கதையில் ஒரே சிறுமியை 15 நிமி டத்திற்கு ஒருமுறை யாராவது கடத்திக்கொண்டே இருக்கின் றனர் எனும்போது, 'எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது' என்று இயக்குனர் மு.மாறனிடம் கேட் காமல் இருக்க முடியவில்லை!
'தொழிலதிபரின் குழந்தையை கடத்திக் கொடுத்தால் தனக்கு பணம் கிடைக் கும்; அதை வைத்து பணயக் கைதியாக சிக்கிய காதலியை மீட்கலாம்' என்பது ஜி.வி.பிரகாஷின் திட்டம். இதன் குறுக்கே, பெட்ரோல் பங்கில் முறைத்தவன் முதல் பிளாக்கில் சரக்கு வாங்கும் 'டாஸ்மாக்' ஆசாமி வரை நுழைய, ஜி.வி., தடை தாண்டுவது கதை!
கடத்தல்காரர்கள் கேட்கும் தொகையை தரத் தயாராக இருக்கும் பாசக்கார அப்பா, தான் கார் ஓட்டுகையில் அவ்வப்போது திரும்பி மகள் இருக்கிறாளா என்பதை உறுதிப்படுத்தி இருந் தால், அவருக்கும் நமக்கும் இந்த துயரம் நேர்ந்திருக்காது!
துவக்கப்பள்ளி குழந்தையின் சிறு தோள் பையில் ஒரு கோடி ரூபாய்; குடும்பத்தின் ஒருவார ஆடைகளை அடைக்கக்கூடிய பையில் 50 லட்சம் ரூபாய்; மீண்டும் கேட்கிறோம்... ' எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது?'
ஒருபக்கம் இசைக்காக 'தேசிய விருது' பெறும் ஜி.வி . , தன் நடிப்பு ஆசையை தீர்த்துக் கொள்ள கதை தேர்வில் பல பகீரத பிரயத்தனங்களை மேற்கொள் கிறார்; என்ன... அவை எல் லாமே முந்தைய கதையை ஆகச்சிறந்ததாக மாற்றி விடுகின்றன!
இந்தவகையில், ரஜினி காந்தும், ஜி.வி.பிரகாஷூம் ஒரே குட்டையில்... ஆங்... அதேதான்.
'இயக்குனரே... எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது?'
ஆக...
எச்சரிக்கை: இந்த ஆண்டில் இன்னும் நான்கு படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கின்றன!

