நாங்க என்ன சொல்றோம்னா...: டோமினிக் அண்டு தி லேடிஸ் பர்ஸ் (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: டோமினிக் அண்டு தி லேடிஸ் பர்ஸ் (மலையாளம்)
PUBLISHED ON : ஜன 26, 2025

தி ட்ரூத் மலையாள படைப்பின் பாதிப்பில் டோமினிக்!
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் 1998ல் வெளியான தி ட்ரூத்தில் புலனாய்வு அதிகாரியாக மம்மூட்டி நடித்திருந்தார்; இதில், டோமினிக்காக நடித்து தயாரித்திருக்கிறார்; அதிலும், இதிலும் ஒரேமாதிரியான திருப்பம்... மிகச்சிறிய வித்தியாசத்துடன்!இப்படித்தான் என்றில்லாது எப்படி வேண்டுமானாலும் மாறிக்கொள்ளும் வகையிலான மம்மூட்டியின் பாத்திர வார்ப்பில் துவங்குகிறது இப்படைப்பின் தோல்வி; 'திரைக்கதையின் சொதப்பல்களுக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மட்டும் பொறுப்பல்ல' என்பது அவருக்கான ஆறுதல்!
தேடி வந்து தட்டில் அமரும் தடயத்தை துாக்கி காட்டும் மம்மூட்டியைப் பார்த்து, 'நீங்க எங்கேயோ போயிட்டீங்க பாஸ்...' என்பதாக பாவனை காட்ட வேண்டிய பாத்திரத்தில் ஜூனியர் சுரேஷ் கோபி; அப்பாவை பிரதி எடுத்தாற் போன்ற மகனது தோற்றம், கமிஷனர் ரசித்த கண்களை கலங்கடிக்கிறது!
மம்மூட்டிக்கு எல்லாவற்றையும் ஓசியாக கொடுக்கும் கிழவி, தான் கண்டெடுத்த லேடிஸ் பைர்ஸ அவரது கையில் கொடுத்து, 'அது யாருடையது' என்பதை கண்டறியச் சொல்லும் கதை. 'சீமான் சொன்னதுபோல் ஈ.வெ.ரா., சொன்னாரா' என்று தேடப்போய், 'ஈ.வெ.ரா., இப்படியெல்லாம் சொல்லி இருக்கிறாரா' என்றறிந்து தெளிந்து நிற்கும் தமிழகம் போல், துப்பறியும் நிபுணரான மம்மூட்டிக்கும் அவர் மூலம் நமக்கும் தெளிவு தர முயற்சித்திருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன். ஆனால்...
'வீடு முற்றுகை' போராட்டம் போல் இலக்கை அடையவில்லை முயற்சி.
ஆக...
'யார் அந்த சார் என்பது நிச்சயம் வெளியாகும்' என்று நம்புபவர்களுக்கு இப்படம் பிடிக்கும்!