sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

நாங்க என்ன சொல்றோம்னா...: பி ஹேப்பி (ஹிந்தி)

/

நாங்க என்ன சொல்றோம்னா...: பி ஹேப்பி (ஹிந்தி)

நாங்க என்ன சொல்றோம்னா...: பி ஹேப்பி (ஹிந்தி)

நாங்க என்ன சொல்றோம்னா...: பி ஹேப்பி (ஹிந்தி)


PUBLISHED ON : மார் 23, 2025

Google News

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சோகம் கூட சுகம்தான்' என்கிறாள் சிறுமி தாரா!

சடசடவென மழை... சட்டென மழை நின்று 'சுரீர்ர்ர்...' வெயில்; மீண்டும் மழை... மறுபடி வெயில்... இப்படியான சூழலில் நிலம் எப்படி உணருமோ, அப்படி நம் மனதில் நீரூற்றி நீர் உறிஞ்சி விளையாடுகின்றன பீ ஹேப்பியின் காட்சிகள்!

'இந்த வலி மட்டும்தானே அவளோட ஞாபகமா என்கிட்டே இருக்கு' எனும் மகனது சோகத்திற்கு, 'ஏன் அப்படி நினைக்கிறே... தாரா இருக்குறாளே' என்று பேத்தியை முன்னிறுத்தும் பாத்திரத்தில், தன் நடிப்பால் காட்சிக்கு காட்சி ஹோலி கொண்டாடுகிறார் நம் நாசர்; பேத்தி தாராவுடனான குறும்பு விளையாட்டுகளில் துளியும் பிசிறின்றி குழந்தையாகவே மாறி நிற்கிறது அவரது முதுமை!

மனைவியை இழந்த ஷிவ் ரஸ்தோகியாக அபிஷேக் பச்சன். மனைவி தந்து சென்ற சோகத்தையும், மகளால் ததும்பும் பாசத்தையும் கண்களில் ஒருசேர சுமந்திருக்க வேண்டிய சவால் பாத்திரம்; 'அமிதாப்' உவக்கும் வகையில் ஜெயித்திருக்கிறார்; 'அம்மா இருந்திருந்தாலும் நான் உங்களைத்தான் அதிகமா நேசிச்சிருப்பேன்' என சிகிச்சையில் இருக்கும் மகள் சொல்ல, உடையாமல் அந்த அன்பை அவர் பருகும்விதம்... நம் கண்ணீருக்கான காரணம்!

இந்தியா கொண்டாடும் நடனப் போட்டியின் சுற்றுகளில் அசத்தும் தாராவை, இறுதிப்போட்டிக்கு முன்னேற விடாமல் தடுக்கிறது புற்றுநோய். 'தன் நடனத்தால் நமக்குள் மழை பெய்ய வைத்தவளா, இப்படி அடியெடுத்து வைக்க சிரமப்படுகிறாள்... தாரா... என் தாயே... என்னடி பிள்ளை செய்கிறது உனக்குள்?' - நெஞ்சம் துடிக்க வைக்கிறது சிறுமி இனயாத் வர்மாவின் நடிப்பு!

பெரும் சோகத்தினுாடே மகளது ஆசையை தந்தை நிறைவேற்றும் க்ளைமாக்ஸில் கோர்க்கப்பட்டிருக்கும் தாராவின் தாலாட்டு காட்சி... எல்லா மகளது முத்தம்.

ஆக...

தாய்மை உணர்வுள்ள ஆண்மைக்கும் அதனை உணர்ந்த பெருமைமிகு பெண்மைக்கும் படம் பிடிக்கும்!






      Dinamalar
      Follow us