ADDED : பிப் 22, 2025 07:49 AM

ஒரு கொலை நடந்த இடத்தில் துப்பறிந்து, தடயங்களை கண்டுபிடித்து தருவது போன்ற காட்சிகள் கொண்ட, 'திரில்லர்' திரைப்படத்தில், கோவையைச் சேர்ந்த, ஷெமீக் என்பவரின் செல்லப்பிராணியான, 'ஷாடோ' என்ற பப்பி நடித்துள்ளது.
ஷூட்டிங் அனுபவங்கள் பற்றி, பப்பியின் உரிமையாளர் ஷெமீக், நம்மிடம் பகிர்ந்தவை: என் செல்லப்பிராணியான ஷாடோ, பெல்ஜியம் மெலன்வா ப்ரீட். இது, கே.சி.ஐ., சார்பில் நடத்திய போட்டிகளில், தேசிய அளவில், நான்கு முறை முதல்பரிசு பெற்றுள்ளது. ஆல்ப்ரீட் இண்டர்நேஷனல் சேம்பியன், ஆல் ப்ரீட் இண்டியன் சேம்பியன், கம்பேனியன் டாக் போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புரோடெக் ஷன் ஸ்போர்ட் அசோசியேஷன் சார்பில், வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்க தயாராகிவருகிறது.
பிறந்து 45 வது நாளில் இருந்தே, பயிற்சி வழங்கி வருவதால், என்ன சொன்னாலும் உடனே செய்து காட்டும். இதனால், ஷூட்டிங்கில் முழு ஒத்துழைப்பு தந்தது. ஒரு கொலை நடந்த இடத்தில் துப்பறிந்து, தடயங்களை கண்டுபிடித்து தருவது போன்ற காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. விரைவில், ஷாடோவை பெரிய திரையில் காணலாம்.

