UPDATED : ஆக 24, 2024 11:31 AM
ADDED : ஆக 24, 2024 11:27 AM

இந்த ஸ்பெஷல் பக்கம், செல்லப்பிராணிகளை நேசிக்கும் அன்பானவர்களை ஆராதித்துஅடையாளப்படுத்தும் விதமாக வெளியிடப்படுகிறது. உண்மையான பாசம்- நேசம் என்பது எதிர்ப்பார்ப்புகளற்றது; எல்லையற்றது. பிறக்கும் போதே ஆறறிவை பெற்றுவிடுவதாக கருதப்படும் மனிதர்களுக்குகூட... நன்றியை, விசுவாசத்தை இன்னமும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பது நாய்கள்தான். அந்த நன்றியை கொண்டாடுவோம்; ஆக.,26ல்!
ப்யூர் வெஜிட்டேரியன்
என் பெட் பேரு காலு. நான் ஸ்கூல் போயிட்டு வந்ததும், இவன் கூடவே தான் இருப்பேன். என் 'பேக்க' துாக்கிட்டு வந்து கொடுக்கும். நான் படிக்கும் போது கூடவே உட்காரும். என்னை மாதிரியே, காலுவும் வெஜிட்டபுள்ஸ் தான் சாப்பிடும். இவனும் நானும் பெஸ்ட் பிரெண்ட்ஸ்.
என் பெஸ்ட் பிரெண்ட்
இது பூடில் ப்ரீட்; பேரு குக்கீ. எப்பவும் என் கூடவே தான் இருக்கும். என்னோட தான் துாங்கும். எங்க போனாலும் கூட்டிட்டு போயிடுவேன். வெளியூருக்கு போயிட்டு வீட்டுக்கு வர்ற வரைக்கும் சாப்பிடாம அடம்பிடிக்கும். என் முகத்தை பார்த்தாவே குஷியாகி ஓடி வந்து தாவும்.
மூணாவது குழந்தை
கொரோனா சமயத்துல, இந்த நாட்டுநாயை தத்தெடுத்தோம். 40 நாள் குட்டியா இருந்தான். நான் என்ன சொன்னாலும் கேக்கும். என் ரெண்டு பசங்களும் மருத்துவர்கள். எல்லாரும் பிசியா சுத்திட்டு இருக்காங்க. என் கூடவே இருக்கறது இந்த மூணாவது குழந்தையான ஜூன் தான்.
குடும்பத்துல ஒருத்தன்
இது ஜெர்மன் ஷெப்பர்டு ப்ரீட்; பேரு ராக்கி. 29 நாள் பப்பியா இருக்கும் போது, எங்க வீட்டுக்கு வந்துச்சு. இப்போ 5 வயசாகுது. ரேஷன் கார்டுல இவன் பேரு இல்லாதது மட்டும் தான் குறை. மற்றபடி, குடும்பத்துல ஒருத்தன் தான். அப்படித்தான் அவனும் நடந்துப்பான்.
ரொம்ப சுட்டி
எங்க ஜக்கிதேவ் ரொம்ப சுட்டி. என்னோட தம்பி மாதிரி தான் இவனை நினைப்பேன். எப்பவும் துறுதுறுன்னு இருப்பான். நான் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும், 10 நிமிஷமாவது, இவனோட விளையாடி கொஞ்சணும். பல நாள் பார்க்காதவன் மாதிரி, பாசத்தை பொழிவான்.
பப்பியுடன் தொடரும் பந்தம்
சர்வதேச நாய்கள் தினத்தில் தான், என் பையன் ஹரீஷ் பிறந்தான். அவனுக்கும், பப்பின்னா ரொம்ப பிடிக்கும். கேரளாவில் இருந்து, இந்த லேப்ரடார் வாங்குனோம். பையன் ஸ்கூல் போயிட்டு வீடு வந்து சேரும் வரை, வாசலையே பார்த்துட்டு இருக்கும்.
புத்திசாலி பப்பி
இது கோல்டன் ரெட்ரீவர் ப்ரீட். ரொம்ப இன்டலிஜென்ட்டான பப்பி. இது முன்னாடி கேமரா கொண்டு வந்தா, க்யூட்டா போஸ் கொடுக்கும். என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கும். வெளியாட்கள் வீட்டுக்கு வந்தா, அவங்க மேல தாவுறது, பயமுறுத்துறதுன்னு எந்த சேட்டையும் பண்ணாது.
செல்லமே சிறப்பு பகுதி செய்தி, படங்கள், வீடியோக்களை பின்தொடர இந்த இணைப்பினுள் நுழையவும்.

