டாக்டர்'ஸ் கார்னர்: 'பேர்ட்ஸ்' வளர்ப்பவரா அப்ப, இத படியுங்க!
டாக்டர்'ஸ் கார்னர்: 'பேர்ட்ஸ்' வளர்ப்பவரா அப்ப, இத படியுங்க!
ADDED : மார் 30, 2024 08:15 AM

கோடை காலத்தில் பறவைகளை பராமரிப்பது எப்படி?- எஸ். தீபிகா, கோவை.
பறவைகளுக்கான கூண்டில் வெவ்வேறு ரக பறவைகளையோ, வெவ்வேறு வயது கொண்ட பறவைகளையோ வைக்கக்கூடாது. ஏனெனில், ஒவ்வொரு ரக பறவைக்கும் வயது வாரியாக அதன் குணாதிசயம் மாறுபடும். தன் அலகை வலிமையாக்க, அவை கொத்திக்கொண்டே இருப்பதால், வயது குறைவான பறவைகளையும் சில நேரங்களில் கொத்தி ஆபத்து ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தற்போது வெயில்காலம் என்பதால் நிழலான காற்றோட்டமான இடத்தில் தான் பறவை கூண்டை வைக்க வேண்டும். கூண்டில் கழிவுகள் சேராத வகையில், அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. குடிக்க சுத்தமான தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும். வெயிலுக்கு முன்பு உணவு கொடுக்க வேண்டும். கம்பு, திணை, கொத்தமல்லி மற்றும் கீரைகளை உப்புத்தண்ணீரில் கழுவிய பின் சாப்பிட கொடுக்கலாம்.
இடைப்பட்ட நேரத்தில் 'விட்டமின் சி' நிறைந்த பழங்கள், கொடுப்பது நல்லது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பறவைகள், திடீரென சோர்வாகவோ, அதன் இறக்கைகள் பளபளப்பு இன்றி, மந்தமாக அசைத்தாலோ, நோய் அறிகுறியாக இருக்கலாம். உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
- டாக்டர் கே.கே. கீதா,உதவி இயக்குனர், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு, கோவை.

