ADDED : ஜூன் 29, 2024 08:00 AM

என் பப்பி அடிக்கடி வாந்தி எடுப்பதோடு, சோர்வாக இருக்கிறது. இதற்கு காரணம் என்ன?- எம்.கார்த்திக், கோவை.
பப்பிகளுக்கு சில நேரங்களில் உணவு ஒவ்வாமையால் வாந்தி வரலாம். ஆனால், தண்ணீர் குடித்தால் கூட வாந்தி எடுப்பது, நுரையுடன் வாந்தி எடுப்பது, அதிக துர்நாற்றத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், 'பார்வோ' வைரஸ் தாக்குதலாக இருக்கலாம். இந்த வைரஸ், தடுப்பூசி போடாத பப்பிகளையே குறி வைத்து தாக்குகிறது.
குறிப்பாக பப்பிகளுக்கு, 45 நாளில் முதல் தடுப்பூசி போட வேண்டும். இதில், பார்வோ உள்ளிட்ட 7 வைரஸ் தாக்குதலுக்கான மருந்து செலுத்தப்படுகிறது. இதேபோல், முதல் மூன்று தடுப்பூசிகள் போடும் வரை, பப்பிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுதல், தெரியாத நாய்களுடன் பழகவிட கூடாது. ஏனெனில், பார்வோ வைரஸ் தாக்குதலை குணப்படுத்த, நேரடி மருந்துகள் இல்லை.
இதன் அறிகுறிகளுக்கு ஏற்ற வகையில், 3-5 நாட்களுக்கு, தொடர்ந்து குளுக்கோஸ் ஏற்றுதல், ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படும். அறிகுறிகள் தீவிரமடையும் பட்சத்தில், பப்பி உயிரிழக்கும், அபாயம் இருப்பதால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம்.
- டாக்டர் எஸ்.அபிலாஷ், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர், கோவை.