/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கண்ணாடி குடுவைக்குள் காடு வளர்க்கலாம்!
/
கண்ணாடி குடுவைக்குள் காடு வளர்க்கலாம்!
ADDED : மார் 08, 2026 05:33 AM

நா ம் இருக்கும் இடத்திலே, ஒரு குட்டிக்காடு உருவாக்கலாம் என்கிறார், தஞ்சாவூரை சேர்ந்த சுதர்சன். இதை இவர் 'டெரரியம்' என அழைக்கிறார்.
வெயிலில் வளர முடியாத தன்மை கொண்ட மினியேச்சர் வகை செடிகளை, கண்ணாடி குடுவைக்குள் வளர்ப்பது தான் 'டெரரியம்'.
''அரபு நாடுகளில் இம்முறை பிரபலமாக உள்ளது. கேரளாவிலும் பலர் ஆர்வமாக வளர்க்கின்றனர். அந்தந்த தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப, எப்படி செடிகளை தேர்வு செய்ய வேண்டுமென தெரிந்து கொண்டால் டெரரியம் உருவாக்கி விடலாம்,'' என்கிறார் சுதர்சன்.
''எப்படி?''
ஒரு தரமான கண்ணாடி குடுவையை எடுத்து, அதில் செடிகள் வளர்வதற்கான பிரத்யேக மண் நிரப்பி, களிமண் உருளைகள், தேங்காய் நார், மண்புழு உரம் ஆகியவை இட்டு செடி நட வேண்டும். அவ்வளவுதான்,''
''யார் வேண்டுமானாலும் உருவாக்கலாமா?''
''ரூ.500ல் இருந்து டெரரியம் செட்-அப் உருவாக்கலாம். மினியேச்சர் செடிகள், கலர் கலராக கடைகளில் கிடைக்கின்றன. நிறைய பயிற்சி வகுப்புகள், ஆன்லைனில் உள்ளன. கொஞ்சம் மெனக்கெடலும், நிறைய ஆர்வமும் இருந்தால், உங்கள் வீட்டிலும் குட்டிக்காடு உருவாக்கலாம்,''
-வித்யா

