ADDED : ஜூலை 13, 2024 10:02 AM

என்னிடம் 'பீமேல்' பப்பி உள்ளது. இதை செல்லப்பிராணியாக வளர்ப்பதால், 'மேட்டிங்' விடாமல், கருத்தடை செய்யலாமா?
--- ஆர்.சூர்யா, கோவை.
பெரும்பாலானோர், நாய்களை தான் செல்லப்பிராணியாக வளர்க்க ஆசைப்படுகின்றனர்.
குறிப்பாக, 'பீமேல் பப்பி'யாக இருந்தால், அதன் இனம், உடலின் தன்மையை பொறுத்து, ஆறு மாதத்தில், குட்டி போட தயாராகிவிடும். இதை 'ஹீட் சைக்கிள்' என்பர். பிறப்புறுப்பில் இருந்து சிறிது ரத்தம் வெளியேறுவதன் மூலம், கருத்தரிக்க தயாராகிவிட்டதை அறியலாம். இச்சமயத்தில், அதே இனத்தை சேர்ந்த 'மேல் பப்பி'யுடன் இணைத்து, கருவுற செய்வர்.
இந்நடைமுறையை தவிர்க்க நினைப்போர், ஹீட் சைக்கிள் துவங்குவதற்கு முன்பு, அதாவது ஆறு மாதத்தில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம். 'அனிமல் வெல்பேர் போர்ட் ஆப் இண்டியா', ஆறு மாதத்தில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம் என பரிந்துரைக்கிறது. இச்சமயத்தில் சுரக்கும் சில ஹார்மோன்கள், பப்பியின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதால், ஒரு வயதுக்கு பிறகு கூட, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம். உங்கள் பப்பியின் ஹெல்த் ரிப்போர்ட் பொறுத்து, கால்நடை மருத்துவரை அணுகினால், உரிய சிகிச்சை வழிகாட்டுதல் பெறலாம்.
- கே.சுலோச்சனா,
கால்நடை மருத்துவர், கோவை.