ADDED : மே 11, 2024 10:13 AM

என் பறவைகளுக்கு, இறகுகள் அதிகளவில் உதிர்கின்றன. இதற்கு காரணம் என்ன?- ஏ.சாதனா, கோவை.
விட்டமின் குறைபாடு, தோல் நோய், உணவு ஒவ்வாமை போன்ற பல்வேறு காரணங்களால், பறவைகளின் இறகுகள் உதிரலாம். இதை கட்டுப்படுத்த, அதிக கெமிக்கல் சேர்க்காத, பதப்படுத்தாத தானியங்களை, சாப்பிட கொடுக்க வேண்டும். ஈரப்பதமான இடத்தில், பறவைகளின் உணவுகளை தேக்கி வைக்க கூடாது. இதில் இருந்து, பூஞ்சை தொற்று உருவாகலாம்.
சுத்தமான நல்ல தண்ணீர், கூண்டிற்குள் வைக்க வேண்டும். உப்புத்தண்ணீர் இறகுகளில் பட்டாலும், தோல் அலர்ஜி பிரச்னை வரும். பறவை கூண்டு, சூரிய வெளிச்சமுள்ள, காற்றோட்டமான இடத்தில் இருப்பது அவசியம். இருட்டான இடத்தில் வைத்தல், விளையாட போதுமான இடமில்லாமல் இருத்தல் போன்ற காரணங்களால், பறவைகளுக்கு ஸ்ட்ரஸ் வரலாம். இச்சமயங்களில், பறவை தனது இறகுகளை தானே கொத்தி கொள்ளும். அதிக இறகு உதிர்ந்தால், மருத்துவரை அணுகலாம். பறவைகளுக்கான விட்டமின் டிராப்ஸ் கடைகளில் கிடைக்கின்றன. இதை தண்ணீரில் கலந்து, குடிக்க கொடுக்கலாம்.
- ஜோசப் ஆன்டனி ராஜேஷ்,கால்நடை மருத்துவர், சேலம்.