ADDED : ஆக 03, 2024 11:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த மழைக்காலத்தில், பப்பியை வெளியிடங்களுக்கு கூட்டிட்டு போகும் போது, அதோட பாதங்கள் தண்ணீரில் நனையாமல் பாத்துக்கறது ரொம்ப முக்கியம். பாத இடுக்குகளில் மண், துாசி, தண்ணீர் தேங்கிட்டா, பூஞ்சை தொற்றால் அரிப்பு, எரிச்சல் ஏற்படுவதோடு, நடக்கவே முடியா சிரமப்படும்.
இதை தவிர்க்க, வாட்டர் ப்ரூப் பூட்ஸ், ஆன்லைன், கடைகளில் கிடைக்கிறது. காற்று உள்ளே செல்லும் வகையில், பூட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பாதங்களுக்கு இறுக்கம் ஏற்படாது. இந்த பூட்ஸ் அடியில், 'ஆன்டி கோலிசன் டோ' இருப்பதால், டைல்ஸில் நடந்தாலும் வழுக்காது. 'ப்ரீட்' குறிப்பிட்டு, பாத அளவுகளுக்கு ஏற்ப ஆன்லைனில் வாங்கலாம். கடைகளுக்கு நேரில் விசிட் செய்தும், பப்பிக்கேற்றதை தேர்வு செய்யலாம்.
இனி உங்க பப்பியும் 'கேட்வாக்' பண்ணும்.