ADDED : மார் 07, 2025 08:50 PM

குட்டி இளவரசி மாதிரி வீட்டிற்குள் ஒய்யாரமாக நடைபோடும் உங்கள் பூனைக்காகவே, மசாஜ் ரோலர், மார்கெட்டில் அறிமுகமாகி உள்ளது. இதை, ஆன்லைனிலும், செல்லப்பிராணிகளுக்கான கடைகளிலும், பல்வேறு வண்ணங்களில்வாங்கலாம்.
நாம் காதில் அணியும் ஹெட்செட் போல, இரு புறங்களிலும், மென்மையான ரோலர் இணைத்து, கைப்பிடியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, முகம், உடலில் பொருத்தி, மெதுவாக முன்னும் பின்னும் இழுத்தால், மசாஜ் செய்துவிடும். தோலில் சிறிய அழுத்தம் கொடுத்து, மசாஜ் செய்வதால், அப்பகுதியில் ரத்த ஓட்டம் சீராகும். முகத்தில் மசாஜ் செய்யும் போது, சீக்கிரமே துாங்கிவிடும். வெயில் காலம் துவங்கிவிட்ட நிலையில், துாங்காமல் அவதிப்படும் போது, இந்த மசாஜரை கையில் எடுத்தால், உங்கள் மியாவ், எங்கிருந்தாலும் ஓடி வந்து, உங்கள் மடியில் தலை சாய்த்து கொள்ளும்.
இது செல்லத்துக்கு மட்டும் தான்....
நீங்க ட்ரை பண்ணாதீங்க!