ADDED : மே 25, 2024 08:53 AM

வீட்டுக்குள்ளே ஓனரை, சுத்தி சுத்தி வர்ற மியாவ்ஸ் தான், இப்போ பலரோட பேவரட் பெட் லிஸ்ட்ல இருக்கு. இந்த மியாவ்ஸ்ல மட்டும், 72 வகை ப்ரீட்ஸ் இருக்கு. இதுல, 'ட்ரெடிஷனல் லாங் ஹேர் பெர்சியன் கேட்' பத்தி சொல்கிறார்,
இன்டர்நேஷனல் கேட் ஷோ ஜட்ஜ் ஆனிகரோல். அவர் நம்மோடு பகிர்ந்தவை: '' இந்த ப்ரீட்டோட பிறப்பிடம் பெர்சியா. 15வது நுாற்றாண்டிலேயே, ட்ரெடிஷனல் லாங் ஹேர் பெர்சியன் கேட்ஸ, செல்லப்பிராணியா மக்கள் வளத்துருக்காங்க. இதுக்கு, செமி ரவுண்ட் பேஸ், லாங் நோஸ், லார்ஜ் ரவுண்ட் ஐஸ், லாங் டெய்ல், சில்கி ஹேர்கோட்-னு, யுனிக்கான ஸ்ட்ரக்சர் இருக்கறதால, பார்க்கவே அழகா இருக்கும்.
நல்லா மெயின்டெய்ன் பண்ணா, 30 வருஷம் வரைக்கும் வாழும். ரொம்ப ப்ரெண்ட்லி, ஈஸியா ஓனரோட அட்டாச் ஆகிடுறதால, இப்பவும் நிறைய பேர், இந்த ப்ரீட் வளக்குறாங்க. இது, நிறைய தண்ணீர் குடிக்கும். 10 நாளைக்கு ஒருமுறை குளிப்பாட்டி விட்டு, நகத்தை வெட்டி விடணும். டெய்லி மார்னிங், ஈவினிங்ல, இதோட ஐஸ் க்ளீன் பண்ணணும். பொறந்து ஆறு மாசம் வரைக்கும், டைல்ஸ் மாதிரி வழுக்குற இடத்துல வச்சா, இதோட லெக்ஸ் வளைஞ்சிக்கும். மத்தபடி, பெருசா மெனக்கெட வேண்டியதில்லை.
இதுல, ஒயிட் கலர் வித் ப்ளூ ஐஸ் இருக்கற கேட் வாங்கும் போது மட்டும், அதுக்கு காது கேக்குதான்னு செக் பண்ணிக்கோங்க. இந்த குறிப்பிட்ட கலர்ல இருக்கற, 99 சதவீத பூனைகளுக்கு, காது கேக்காது,'' என்றார்.

