sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

 வீட்டு பட்ஜெட் குறைவா ? உயர்வா ? தி.மு.க. - அ.தி.மு.க. மல்லுக்கட்டு

/

 வீட்டு பட்ஜெட் குறைவா ? உயர்வா ? தி.மு.க. - அ.தி.மு.க. மல்லுக்கட்டு

 வீட்டு பட்ஜெட் குறைவா ? உயர்வா ? தி.மு.க. - அ.தி.மு.க. மல்லுக்கட்டு

 வீட்டு பட்ஜெட் குறைவா ? உயர்வா ? தி.மு.க. - அ.தி.மு.க. மல்லுக்கட்டு


ADDED : பிப் 10, 2026 06:45 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கை யில் இரண்டு 'பிரின்ட் -அவுட்'களுடன் வந்தாள், மித்ரா.

''இலவச பஸ் பயணம், மகளிர் உதவித்தொகை... இப்படீன்னு ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு சேமிக்க முடியுதுன்னு தி.மு.க. காரங்களும்; 'விடியா ஆட்சி - உங்கள் பில்லே சாட்சி'ங்கற தலைப்பில கரன்ட் பில், விலைவாசி, வரி எல்லாம் கூடிப்போச்சுன்னு அ.தி.மு.க. காரங்களும் நம்ம ஊர்ல வீடு வீடா 'பிரின்ட் அவுட்' கொடுத்துட்டுப் போறாங்க சித்ராக்கா''

''ரெண்டு கட்சிக்காரங்களும் மல்லுக்கட்டுறது இருக்கட்டும்... வீட்டு பட்ஜெட் உசந்திருக்கா, குறைஞ்சிருக்கான்னு நமக்கெல்லாம் தெரியாதுன்னு நெனச்சிட்டாங்க போல''

''அக்கா... வீட்டு பட்ஜெட்ட பத்தி அப்புறம் பேசுவோம்... மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல், நம்ம ஊர்ல மத்திய பட்ஜெட் குறித்து பேட்டி கொடுத்திருக்காரு...

''அவருதான் பா.ஜ. தமிழக தேர்தல் இணை பொறுப்பாளர்... அவரு பேட்டி கொடுக்கறதுக்கு முன்னாடி, அமெரிக்க வரி குறைப்பு தொடர்பா, மீடியாகாரங்க, கேக்கணும்ன்னு நினைச்சாங்களாம்...

''ஆனா, பா.ஜ. காரங்க உஷாரா... பட்ஜெட்ட பத்தி மட்டும் கேளுங்க... அமெரிக்க வரி குறைப்பு தொடர்பா அண்ணாமலை 'பிரஸ் மீட்' தனியா கொடுப்பாருன்னு சொன்னாங்களாம்''

''மித்து... தேர்தல் அறிக்கை தொடர்பா சிட்டில மக்கள்ட்ட கருத்து கேக்கறதுக்கு பா.ஜ. மனுப்பெட்டிவச்சிருக்காங்களே...''

''அக்கா... ஒவ்வொரு கட்சிக்காரங்களும் மக்கள் கருத்தை எலக்ஷன் டைம்ல மட்டும்தானே ரொம்பவே மதிக்கிற மாதிரி நடந்துக்கறாங்க... வர்ற 14ம் தேதி பல்லடத்துல கனிமொழி தலைமைல, தி.மு.க.காரங்க மக்கள்ட்ட கருத்து கேக்கப்போறாங்களாமே...''

''மித்து... இலவச அறிவிப்பு இல்லாம, தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எப்பத்தான் தேர்தல் அறிக்கையைத் தயார் பண்ணப்போறாங்களோ''

''அக்கா... சிட்டில காங்கிரஸ்காரங்க ஆர்ப்பாட்டம் நடத்தி முடிச்சதும், கட்சிக்கரை துண்டு, கொடியையெல்லாம் தொண்டர்கள்ட்ட இருந்து திரும்ப வாங்கிட்டாங்களாமே...''

''ஆமா மித்து... கட்சிக்காரங்ககிட்ட கேட்டப்ப, பல வருஷமா இதே நடைமுறைதான் பின்பற்றுறோம்ன்னு ஒரே போடா போட்டாங்களாம்... நாங்க இதெல்லாம் கொடுக்கிறோம். எத்தனை கட்சிக்காரங்க இதையாவது கொடுக்கிறாங்கன்னு பெருமை வேற பேசறாங்களாம்''

''அக்கா... மாவட்டத்துல இந்த முறையாச்சும், ஒரு தொகுதிலயாவது காங். போட்டியிடுதான்னு பார்ப்போம்''

சித்ரா புன்னகைத்தாள்.

மேயர் சபதம் நிறைவேறுமா? ''மேயர் தினேஷ்குமார் டிராபிக்கெல்லாம் ஒழுங்குபடுத்திற மாதிரி வீடியோ பார்த்தேங்க்கா...''

''ஆமா மித்து... ஆனா, அவரோட மெயின் டூட்டி, மாநகர குப்பைகளை ஒழுங்குபடுத்துறதுதான்... சபதம் எல்லாம் போட்ருக்காரு... எலக்ஷனுக்குள்ள ஒழுங்கு படுத்திருவாரான்னு பார்ப்போம்''

''அ.தி.மு.க. எம்.எல்.ஏ. விஜய குமார், கோவில் விழால டான்ஸ் எல்லாம் ஆடுறாருக்கா...''

''மித்து... வடக்கு தொகுதி சீட்டை 'கன்பர்ம்' பண்ணலைன்னா, அவரு நிலைமை ஆட்டம் கண்டுரும்ன்னு எதிர் கோஷ்டிக்காரங்க கிண்டலடிக் கிறாங்களாம்''

''அக்கா... கலெக்டர் ஆபீஸ்ல நடந்த அங்கன்வாடி ஊழியர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த த.வெ.க. காரங்க ஏமாற்றத்தோட திரும்பிப்போயிட்டாங்களாமே...''

''ஆமா மித்து... வந்தவங்க கட்சி அனுமதியோட செல்லலைன்னு கட்சி நிர்வாகிகள், விளக்கம் கொடுத்திட்டாங்களே''

''எல்லாம் ஆர்வக்கோளாறுதாங்க்கா... இப்பெல்லாம், விஜய் படத்தை டீசர்ட்ல போட்டுட்டாலே த.வெ.க.காரங்களா ஆயிடறாங்கக்கா''

''சரியா சொன்ன மித்து... பல்லடம் பக்கம் பணிக்கம்பட்டி பஞ்சாயத்துல குடிநீர் கனெக்ஷனுக்காக கொண்டுவந்த ஸ்கீம்ல, மூனு வருஷமாயும் பைப் போடல. இந்தப் பிரச்னைய, பா.ஜ. கையில் எடுத்திடுச்சு... அண்ணாமலை வரைக்கும் தகவல் கொண்டுபோய்ட்டாங்களாம். இதனால இப்ப அவசர அவசரமா பைப் போடுறாங்களாம்''

''நல்லது நடந்தா சரிதாங்க்கா''

எதிர்பார்ப்புடன் சொன்னாள் மித்ரா.

போலீசாரின் ஒருமைப் பேச்சு ''மித்து... நைட் நேர வாகனத் தணிக்கைல திருப்பூர், அவிநாசில வாகன ஓட்டிகள்ட்ட போலீஸ்காரங்க, ஒருமைல பேசறாங்க... ஒழுங்கீனமாவும் நடந்துக்கிறாங்க...

''கண்ணுல டார்ச் அடிக்கிறாங்களாம். சமீபத்துல மங்கலத்துல போதைல ஒரு போலீஸ்காரர், வாகன ஓட்டிகிட்ட ஒருமைல பேசியிருக்காரு. அவரு மேல நடவடிக்கை எடுத்திருக்காங்க...

''சிட்டில கொங்கு பெயர் கொண்ட பகுதிக்கான போக்குவரத்து இன்ஸ்பெக்டர், டிரைவரோட பேச்சுக்குத்தான் தலையாட்டுறாராம்.

''ஜீப்பை விட்டு இன்ஸ். நகர்றதில்ல... இ-சலான் மெஷினை டிரைவர் கையில் கொடுத்தர்றாராம். ''வாகன ஓட்டிகள்ட்ட ஒருமைல பேசிட்டு பைன் போடுறாராம். சீக்கிரம் சிக்குவார்ன்னு சொல்றாங்க...

'அக்கா... சிவன்மலைல தைப்பூசத் தேர்த்திருவிழா நடந்துதில்ல.

''மெயின் ரோட்ல இருந்து உள்ளே செல்ல எல்லா வாகனங்களுக்கும் பாஸ் இருந்தா மட்டும்தான் அனுமதிச்சாங்க...

''டிவி நிருபர் ஒருத்தரு, போதைப்பொருள் கேஸ் ஏகப்பட்டது இருக்கிற ஒரு குற்றவாளியோட வாகனத்தில போயிருக்காரு...

''பாஸ் கேட்டப்ப, போலீஸ்காரங்களோட சண்டை போட்டாராம். போலீஸ்காரங்க, ஜாதி ரீதியா நடந்துக்கிறாங்கன்னு உயரதிகாரிகளுங்கு பொய்யான தகவலையும் பரப்புறாராம்.

''மொட்டை பெட்டிஷன் போடுறதிலயும் கில்லாடியான இந்த நிருபருக்கு பெரிய போலீஸ் ஆபீசரோட ஆசி இருக்குதாம். அதுதான் இவரோட தைரியத்துக்குக் காரணம்ங்கறாங்க போலீஸ்ல''

''மித்து... வெட்டி பந்தான்னு சொல்லு''

கலகலத்தாள் சித்ரா.

டவுன் பஸ்கள் ஞாயிறு 'கட்' ''அக்கா... மாவட்ட மைய நுாலகத்துல, இடப்பற்றாக்குறை காரணமா, வாசகர்கள் வெளில அமர்ந்துதான் புத்தகங்களை வாசிக்க முடியுது...

''மாவட்ட நுாலகர் பணியிடமும் மாசக்கணக்குல காலியா இருக்குது.

''பொறுப்பு அலுவலரால சட்டுன்னு எந்த முடிவும் எடுக்க முடியறதில்லைன்னு சொல்றாங்க''

''மித்து... சண்டேன்னா அரசு டவுன் பஸ் சர்வீஸ்ல ஏகப்பட்ட குளறுபடி நடக்குதாம்.

''அவிநாசி ரோடு, பி.என்.ரோடு வழியாக போற பஸ்களை வழித்தடம் மாத்தி ஊத்துக்குளி ரோடு வழியா அனுப்பறாங்களாம்.

''சில பஸ்கள்ல வழித்தட எண் இருக்கிறதில்ல... எங்கே போகுதுன்ற விவரத்தை மறைச்சுடறாங்களாம். முன்புற கண்ணாடில ஒரு இடத்தோட பேரும், பின்புற கண்ணாடில இன்னொரு இடத்தோட பேரும் இருக்குதாம். கிராமங்களுக்கு பஸ்சே இருக்கறதில்லைன்னு பொதுமக்கள் புலம்பறாங்க...''

சித்ரா ஆதங்கப்பட்டாள்.

''அக்கா... வருவாய்த்துறை சார்பில கடந்த ஜூலை மாசம், முத்தணம்பாளையம் பகுதில சிலருக்கு பட்டா வழங்கியிருக்காங்க... ஆனா, இடத்தை இன்னும் மார்க்கிங் செய்து தரல.

''நீண்ட கால போராட்டத்துக்கு அப்புறமா எலக்ஷனையொட்டி ஓட்டுக்காக பட்டா கொடுக்கறதெல்லாம் சரிதான். இடத்தையே கண்ணுல காட்டாம இருக்கலாமான்னு பயனாளிகள் கேக்கறாங்களாம்''

''மித்து... தாராபுரம் நகராட்சிக் கூட்டத்துல தீர்மானங்கள் எல்லாமே ரகசியம்தானாம்.

''கூட்டத்துல நம்பரைச் சொல்லித்தான் தீர்மானம் நிறைவேத்தறாங்களாம். கவுன்சிலர்களுக்கு மட்டும்தான் அஜென்டா கொடுக்கிறாங்களாம். பத்திரிகைகளுக்கு கொடுக்கிறதில்லையாம்.

''என்ன பணி, எந்த நிதி, எவ்வளவு செலவுங்கற விவரம் வெளில தெரியக்கூடாதுங்கறதுல அவ்ளோ ரகசியம் பேணுறாங்களாம்.

''இதுதான் வெளிப்படையான நிர்வாகமான்னு மக்கள் கேக்கறது, நகராட்சி நிர்வாகத்தினரோட காதுகளுக்கு எப்பக் கேக்கப்போகுதோ... தெரியல''

கிசுகிசுத்தாள் சித்ரா.

சம்பளம் தெரியாத பணியாளர்கள் ''மித்து... துாய்மைப்பணியாளர் நல வாரியத் தலைவர் ஆறுச்சாமி, மாநகராட்சி துாய்மைப்பணியாளர்ட்ட குறைகேட்டார்ல.

''அப்ப பணியாளர்ட்ட தினசரி சம்பளம் எவ்வளவுன்னு கேட்டாராம்; யாருக்கும் சரியா சொல்லத் தெரியலையாம்.

''கமிஷனர், நல அலுவலர், சுகாதார அலுவலர்ன்னு ஆளாளுக்கு ஒரு தொகையைச் சொன்னாங்களாம்.

''வெறுத்துப்போன ஆறுச்சாமி, 'அரசு நிர்ணயித்த சம்பளம் வரும்'ன்னு சொல்லீட்டு நடையைக் கட்டிட்டாராம்''

''அக்கா... மாற்றுத்திறனாளி களுக்கு, ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன், சக்கர நாற்காலின்னு பலவகை உபகரணங்கள இலவசமா வழங்கறாங்க...

''ஆனா ஆசாமிகள் சிலர், வசூல் வேட்டை நடத்துறாங்களாம். இது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரமோகனுக்குத் தெரிஞ்சிருச்சாம்.

''சமீபத்தில, வித்யா கார்த்தி மண்டபத்துல நடந்த நிகழ்ச்சில, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர், ஸ்மார்ட் போன், தையல் மெஷின் வழங்கியிருக்காங்க...

''எல்லாமே ப்ரீதான். யாராச்சும் இதுக்குப் பணம் கேட்டாங்களா... நீங்க கொடுத்தீங்களான்னு ஒவ்வொரு மாற்றுத்திறனாளியிடமும் சந்திரமோகன் ரகசியமா விசாரிச்சாராம்.

''ஒரு ஆபீசரோட நல்ல முயற்சியா இதை மாற்றுத்திறனாளிகள் பார்க்கறாங்க...''

மகிழ்ச்சியுடன் சொன்னாள் மித்ரா.

மின் வாரியத்தில் முறைகேடுகள் ''மித்து... தொழில்துறையினரோட சி.எஸ்.ஆர்., நிதியை வாங்கி, அரசு விடுதி, பள்ளிகள், அங்கன்வாடி களுக்கு சேவை செய்வதற்காக, 'திருப்பூர் மாவட்ட நலச்சங்கம்' துவங்கியிருக்காங்க.

''ஈரோடு கமிஷனரா இருந்தப்ப, நம்ம கலெக்டர் அங்க அப்படித்தான் செஞ்சாராம். இதேபோல இங்கேயும் செய்யப்போறாங்களாம். 10 சதவீதம் நடந்தாலும், மாவட்ட நிர்வாகம் சாதிச்ச மாதிரி தானே...''

''அக்கா... பூமலுார் துணை மின் நிலைய பராமரிப்பு பணிக்காக, மின் நிறுத்த அறிவிப்ப சரியா வெளியிடறதில்லையாம். பல்லடம் கோட்டத்தில் இணைஞ்ச பிறகு இப்படி நடக்குதாம்.

''திருப்பூர் மின்வாரிய ஆபீஸ்ல, விதிமீறல், முறைகேடுகள் அதிகம் நடக்குறதா புகார் எழுந்துச்சு... குறைகேட்பு கூட்டத்திலயும் மனு கொடுத்திருந்தாங்க...

''இதுக்கப்புறம் ஒரு டீம் போட்டு, ஊத்துக்குளி, திருப்பூர் கோட்ட பகுதிகள்ல திடீர்ன்னு ஆய்வு பண்ணியிருக்காங்க. ஏகப்பட்ட முறைகேடுகள் உறுதியாயிருக்காம்.

''ஆனாலும், 12 மின் இணைப்புகளை மட்டும் துண்டிச்சிருக்காங்க. விவகாரம் வெளியே வராதமாதிரி அமைதியா இருந்துட்டாங்களாம்''

''மித்து... போயம்பாளையம் கிராமத்துல, பழனிசாமி நகர், ஆர்.கே. நகர் பகுதில, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கல்லாங்குத்து புறம்போக்கு நிலம், ஆக்கிரமிக்கப்பட்டிருக்கு...

''அங்க, அரசுக்கு சொந்தமான நிலம்னு அறிவிப்பு பலகை வச்சுட்டாங்க... அறிவிப்பு பலகையில யாராவது கை வச்சா வழக்கு பாயும்ன்னு எச்சரிக்கையும் செஞ்சிருக்காங்க…''

சித்ரா வெளிப்படுத்தினாள்.

கடைக்காரர்கள் குமுறல் ''அக்கா... டாலர் சிட்டிக்கு வெளியூர்ல இருந்து விடிய விடிய மக்கள் வந்துட்டு இருக்காங்க...

''ஆனா, போலீசோ நைட் 11 மணிக்கு முன்னாடியே கடைய சாத்தணும்ன்னு சொல்றாங்க... அதுக்கு பாதுகாப்ப காரணமா காட்றாங்களாம். இதுல வசூல் வேட்டையும் நடக்குதாம். போக்குவரத்துக்கு இடையூறுன்னு சொல்லி கேஸ் போடுறாங்களாம்.

''24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி இருந்தாலும், அறிவிக்கப்படாத நடைமுறை எதுக்கு? கடை அடைக்கும் நேரம் குறிச்சு போலீஸ் ஆபீசர்ஸ் வெளிப்படையா தெரிவிக்கணும்ன்னு கடைக்காரங்க குமுறுறாங்களாம்''

''மித்து... அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளில கவாத்துப்பயிற்சியை போலீஸ் மேற்கொண்டாங்க... ஆனா, வாக்கிங் போறவங்கள, மைதானத்துக்குள்ள அனுமதிக்காம கெடுபிடி காட்டுனதால, போலீஸ் மேல பொதுமக்கள் கடுப்பாயிட்டாங்களாம்.

''மலைக்கோவில் தேர்த்திருவிழா சமீபத்துல நடந்துச்சாம். இதுல துாரி, ராட்டினம் ம ற ்றும் கடைகள் வைக்க அனுமதிக்க வியாபாரிகளிடம் பெரிய தொகை போலீஸ் தரப்புல கேட்டிருக்காங்க...

''கொடுக்காததால, கடையைச் சீக்கிரம மூடச்சொல்லி போலீஸ் கெடுபிடி காட்டியிருக்காங்க... காசு கொடுத்திருந்தா கெடுபிடியே இருந்திருக்காது''

தர்பூசணிக் கீற்றை சித்ராவும், மித்ராவும் சுவைக்கத் துவங்கினர்.

''பல்லடம் பக்கம் பணிக்கம்பட்டி பஞ்சாயத்துல குடிநீர் கனெக்ஷனுக்காக கொண்டுவந்த ஸ்கீம்ல, மூனு வருஷமாயும் பைப் போடல. இந்தப் பிரச்னைய, பா.ஜ. கையில் எடுத்திடுச்சு... அண்ணாமலை வரைக்கும் தகவல் கொண்டுபோய்ட்டாங்களாம். இதனால இப்ப அவசர அவசரமாக பைப் போடுறாங்களாம்''


''போலீஸ்காரங்க இரவு 11 மணிக்கு முன்னாடி கடையை அடைக்கணும்ன்னு சொல்றாங்க... அதுக்குப் பாதுகாப்பைக் காரணமா காட்றாங்களாம். இதுல வசூல் வேட்டையும் நடக்குதாம். போக்குவரத்து இடையூறுன்னு சொல்லி கேஸ் போடுறாங்களாம்''







      Dinamalar
      Follow us