sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

சர்வதேச சாகச மேடை கோவையிலிருந்து வீரநடை!

/

சர்வதேச சாகச மேடை கோவையிலிருந்து வீரநடை!

சர்வதேச சாகச மேடை கோவையிலிருந்து வீரநடை!

சர்வதேச சாகச மேடை கோவையிலிருந்து வீரநடை!


UPDATED : ஜூன் 29, 2024 02:33 AM

ADDED : ஜூன் 29, 2024 02:08 AM

Google News

UPDATED : ஜூன் 29, 2024 02:33 AM ADDED : ஜூன் 29, 2024 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாலயே, இண்டர்நேஷனல் சேம்பியன் டைட்டில் அடிச்ச பெல்ஜியம் ஷெப்பர்ட் ப்ரீட், கோவை, காளப்பட்டியில் தான் இருக்குன்னு கேள்விப்பட்டதும், அட்ரஸ் விசாரிச்சு நேரில் சென்றோம்.

கிராஸ் கிரவுண்டு, இன்டோர், அவுட் டோர் பிளே ஏரியா, வால் க்ளைம்பிங், ஸ்விம்மிங் பூல், பிரைவேட் ரன் வே, ஏசி ரூம்-னு, 60 சென்ட் இடத்துல, ஐடி ஆபிஸ் லுக்ல, ஹை-பையா இருந்துச்சு,'ஷெமீக் கே9' டிரைஜனிக் அகாடமி. டாக்ஸ் ட்ரைன் பண்ண இவ்ளோ வசதிகளா என்றதும், அதை ஆமோதிப்பது போல தலையசைத்து பேச துவங்கினார், ஷெமீக்.

''என்கிட்ட இப்போ, 10 பெல்ஜியம் ஷெப்பர்ட் இருக்கு. எல்லாமே ஷோ ப்ரீட். இதுல, 'ஷாடோ', 'ஷாஷா' ரெண்டுமே, இண்டர்நேஷனல் சேம்பியன் டைட்டில் அடிச்சிருக்கு. ஒபீடியன்ஸ், சேம்பியன்னு, ரெண்டு டைட்டில் அடிச்ச, ஒரே ப்ரீட் இவங்க தான். இதுதவிர, நேஷனல் சேம்பியன்-னு நிறைய டைட்டில் வாங்கியிருக்காங்க.

இதோட வாரிசுகள், 'ஸ்னைப்பர்', 'ஸ்பைகி', 'ஷூட்டர்' மூணுமே, ஒபீடியன்ஸ் ஷோ டைட்டில் வின்னர்ஸ். நிறைய ஷோல, 'பெஸ்ட் ஆப் ப்ரீட்' டைட்டில் அடிச்சிருக்கு. ஷூட்டரோட பப்பி 'ஸ்பேடு', ஷோக்கு தயாராகிட்டு இருக்கான். இப்படி சேம்பியன்ஸோட மூணு தலைமுறை பிளட் லைன் இருக்கறதால, குவாலிட்டியான பெடிகிரி டெவலப் பண்றதுக்கு தான், இந்த செட் அப் ரெடி பண்ணேன்.

ஒபீடியன்ஸ் ட்ரைனிங் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி, பப்பிக்குன்னு சில டெஸ்ட் இருக்கும். அப்புறம் தான் ட்ரைனிங் கிளாஸ் தொடங்கும்.

என்ன ட்ரைனிங் கொடுப்பீங்க?

இதுவரைக்கும், 100க்கும் மேல பப்பி சேல் பண்ணியிருக்கேன். என்கிட்ட இருந்து வாங்குன பப்பியை மட்டும் தான் ட்ரைன் பண்றேன். வேற ப்ரீடா இருந்தா, அதுக்கு சில டெஸ்ட் இருக்கு. பேசிக்கா ஹோம் ஒபீடியன்ஸ் பண்றதுக்கு, பொறந்து 4 மாசத்துல இருந்து தொடங்கலாம்.

ஷோ ப்ரீடா இருந்தா, குறைஞ்சது 6 மாசத்துல இருந்து ஒரு வருஷத்துக்கு ட்ரைனிங் கிளாஸ் இருக்கும். அட்வான்ஸ் மாடர்ன் சயின்ஸ் மெத்தட்ல, டெய்லி ட்ரைனிங் கொடுப்போம். நிறைய ஒர்க் அவுட் இருந்தா சீக்கிரம் டாக்ஸ் சோர்ந்துடும். இன்டர்நேஷனல் லெவல்ல, ஒரு ஷோல இருக்கற, எல்லா ஸ்போர்ட்ஸ் அயிட்டங்களும் இங்க இருக்கு. முறையா பயிற்சி கொடுக்கறதால, 60க்கும் மேல, ஷோ ப்ரீட்ஸ் உருவாக்கியிருக்கேன்.

பெல்ஜியம் ஷெப்பர்டோட சிறப்பு என்ன?

இந்த ப்ரீட் வெளிநாடுகள்ல, மிலிட்டரி, ஒர்க்கிங், கார்டிங்-னு பயன்படுத்துறாங்க. இந்தியால, அதுவும் கோயமுத்துார்ல, இதேமாதிரியான பெடிகிரி குவாலிட்டிய உருவாக்கணும்னு முடிவெடுத்தேன். இதனால உருவானது தான், 'ஷெமீக் கே9' டிரைஜனிக் அகாடமி. அடுத்ததா அமெரிக்கன் ஸ்போர்ட், புரொடெக் ஷன் ஸ்போர்ட் அசோசியேஷன் உருவாக்கணும். என்னோட ப்ரீட்ஸ, கோயமுத்துாரோட பிரதிநிதியா, உலகத்துல நடக்கற எல்லா டாக் ஷோலயும் கலந்துக்க வச்சி, மெடல் அடிக்கணும்.

இப்படி கூட, பொறந்த ஊருக்கு பெருமை சேர்க்கலாம் போல இருக்கே!

என் மனச கொள்ளையடிச்ச மஸ்தானி! சிலிர்கிறார் தேவேந்திரபிரதாப்'இளங்கன்று பயமறியாதுங்கற பழமொழி குதிரைக்கும் பொருந்தும். எப்பவும் எனர்ஜிடிக்கா இருக்கறதால, காலேஜ் படிக்கும் போதே, குதிரை மேல கிரேஸ் வந்துடுச்சு. ஆனா இது ரொம்ப காஸ்ட்லி. இப்போ பிசினஸ் பண்றதால, ஆறு குதிரை வாங்கிட்டேன். இதுல மஸ்தானி தான் என்னோட பேவரட்,'' என்கிறார், திருப்பூரை சேர்ந்த தேவேந்திரபிரதாப்.

உங்க மஸ்தானிய எங்க மீட் பண்ணீங்க--ன்னு கேட்டதும், சிலிப்போடு பேச ஆரம்பித்தார்.

'' அது ரொம்ப சுவாரஸ்யமான கதை. ராஜஸ்தான் தான் அப்பாவோட பூர்வீகம். ஆனா, நான் பொறந்து, வளர்ந்தது எல்லாமே திருப்பூர். நல்ல வனப்பான குதிரை வாங்க, ராஜஸ்தான் போனோம். வேற குதிரையை போட்டோல பார்த்து, ஓகே பண்ணிட்டோம். ஆனா குதிரை பண்ணைக்கு போனதும், மஸ்தானியோட கலர் எனக்கு ரொம்ப புடிச்சதால வாங்கிட்டு வந்துட்டேன். ஒன்றரை வயசுல வாங்கும் போது, மஸ்தானியோட விலை நாலரை லட்சம். இப்போ அதுக்கு மூன்றரை வயசாகுது.

ராஜஸ்தான்ல இருந்து நம்மூருக்கு வந்ததும், ரெண்டு மூணு நாள்லயே, என்னோட ரொம்ப அட்டாச் ஆகிடுச்சு. டெய்லி மார்னிங், ஈவினிங் சவாரி போவோம். நான் ஏறி உட்கார்ந்தா, என்னோட மைண்ட் செட்டுக்கு ஏத்தமாதிரி ஓடுவா. என்னோட எல்லா பீலிங்சும் அவளுக்கு புரியும். ஜாலியா இருந்தா, சீறிபாயும். டயர்டாவோ, சோகமாவோ இருந்தா, ரொம்ப மெதுவா ஓடும். இதெல்லாம் தான் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்.

மஸ்தானியோட டெய்லி ஆக்டிவிட்டி?

இது, மார்வாரி ப்ரீட். ரொம்ப எனர்ஜிடிக்கானது. டெய்லி குரூம் பண்ணிவிடுவோம். இதோட இடத்துல நடந்துக்கிட்டே இருக்கும். மார்னிங், ஈவினிங் ரெய்டு போகும். பச்சை புல் விரும்பி சாப்பிடும். நிறைய தண்ணீர் குடிக்கும். இதுக்கு, ஈஸியா செரிக்கற மாதிரியான புட் கொடுக்கணும். வயிறுவலி வராம பாத்துக்கணும். லாடம் மாத்திட்டே இருக்கணும். மத்தப்படி பெருசா மெனக்கெட வேண்டியதில்ல.

என் ப்ரெண்ட்ஸ், பேமிலி மெம்பர்ஸ, மஸ்தானிக்கு நல்லா தெரியும். அவங்ககிட்டயும் சாதுவா நடந்துக்குவா. வெளியாட்களை தொட கூட விட மாட்டா. வெளியூருக்கு போயிட்டு வந்தா, சத்தம் போட்டு கூப்பிட்டு, மிஸ் பண்ணதை வெளிப்படுத்துற மாதிரி, முகத்தோட முகம் வச்சி கொஞ்சுவா. இதனாலயே மஸ்தானிக்கு என் மனசுல தனி இடம் இருக்கு.

ஜூலை 13, 14 கோவையில் பூச் பார்ட்டி!

உங்க பெட்ஸோட மறக்க முடியாத அனுபவங்களை அள்ளித்தர, 'லே ஷீரோ' நிறுவனம், கோவையில் வர்ற 13, 14ம் தேதிகள்ல, பூச்பார்ட்டி நடத்துறாங்க.

உங்க செல்லக்குட்டியோட ஜாலியான, பன் புல்லான மெமரிஸ் கிரியேட் பண்ணணும்னு ஆசைப்படுறவங்க, கோவை, மத்திப்பாளையம், சி.எஸ்.ஆர்., ரெசார்ட்ல நடக்குற, இந்த பூச்பார்ட்டில கலந்துக்கலாம். இங்க, டிரெண்டான டிரஸ் காம்போல நீங்களும், உங்க பப்பியும் வலம்வர்றதுக்கு, பேஷன் ஷோ நடக்குது. கிட்ஸ் கேம்ஸ், அடாப்டிங் டிரைவ், பன் ஆக்டிவிட்டிஸ், புட் பெஸ்டிவல்-னு ரெண்டு நாளும், கொண்டாட்டத்துக்கு பஞ்சமிருக்காது. உங்களுக்கான டிரஸ், பேஷன் ஸ்டால், பெட்ஸ்க்கான ஸ்டால்ஸ்-னு, பர்சேஸ் பண்றதுக்கு, எக்கச்சக்க விஷயங்கள் இருக்குது. உங்க பப்பியோட சேட்டைகளை, மத்த பெட் லவ்வர்ஸோட பகிர்ந்துக்கறதுக்கான, கெட் டூ கெதர் பார்ட்டி மாதிரியும், ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நுழைவு கட்டணம் வெறும், 99 ரூபாய் மட்டுமே. 'தினமலர்' நாளிதழ், இந்த ஈவன்ட்டுக்கு, மீடியா பார்ட்டனரா கைக்கோர்க்குது. குட்டீஸோட குஷியா இந்த பார்ட்டில கலந்துக்க ரெடியாகுங்க. கூடுதல் விபரங்களுக்கு: leshiro.india@gmail.com / 90928 78000.

ஆக., 3,4! கொடைக்கானலில் டாக் ஷோ

பச்ச பசேல்னு சுற்றிலும் மலை, மூடுபனி, துாறல்னு, வித்தியாசமான கிளைமேட்ல, 'தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷன்' சார்பில், மூஞ்சிக்கல், தி கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூல்ல, வர்ற ஆகஸ்ட் 3, 4ம் தேதிகள்ல, டாக் ஷோ நடத்துறாங்க.

'தி மெட்ராஸ் கெனைன் கிளப்', 'தி சேலம் அக்மி கென்னல் கிளப்'போட, சேம்பியன் ஷோவும், இதே இடத்துல தனித்தனியே நடத்துறதால, டாக் லவ்வர்ஸ், இந்த ஈவன்ட்ட மிஸ் பண்ணிடாதீங்க. 11 பிரிவுகள்ல, போட்டி நடக்குறதால, கே.சி.ஐ., சான்றிதழ் பெற்ற டாக்ஸ் மட்டும், பங்கேற்க அனுமதிக்கப்படுது. வெளிநாடுகள்ல இருந்தும், பப்பியோட திறமையை மதிப்பிட ஜட்ஜ் வர்றாங்க. கூடுதல் தகவலுக்கு: 044- 26260 693/ 98840 46278/ www.madrascanineclub.org.

நீங்க 'டாக் லவ்வரா' பண்ணாதீங்க ஓவரா

மதுரை, துரைசாமி நகர்ல, 15 வருஷமா ஒரு குறிப்பிட்ட ப்ரீட் வளர்க்குறதோட இல்லாம, தன்னோட பேரையே, தன் செல்லத்துக்கும் வச்சிருக்காருன்னு கேள்விப்பட்டதும் ஆச்சரியத்துடன் நேரில் விசிட் அடித்தோம்.

வாசலில் இருவரும் வரவேற்றனர். ஒருவர் புன்னகையால். மற்றொருவர் ஏரியாவுக்கு புதுசு போலங்கற மைண்ட் வாய்ஸில், சுட்டித்தனத்துடன்... ஒரு வழியாக, குட்டி சதீஷை விளையாட விட்டு, உரிமையாளர் சதீஷிடம் பேசினோம்.

இந்த ப்ரீட் மேல ஏன் இவ்ளோ கிரேஸ்?

ஜெர்மன் ஷெப்பர்ட், ஓனரோட ஈஸியா அட்டாச் ஆகிடும். சின்ன வயசுல பக்கத்து வீட்டுக்காரர், இந்த ப்ரீட் வளர்த்தார். துறுதுறுன்னு விளையாடிட்டே இருக்கும். அதை பார்த்தே வளர்ந்ததால, இந்த ப்ரீட் மேல கிரேஸ் அதிகமாகிடுச்சு. 15 வருஷமா நானும் இந்த ப்ரீட் வளக்குறேன்.

இதோட ஸ்பெஷாலிட்டியே, ஓனரோட ஆர்டருக்கு கீழ்படியும். ரொம்ப விசுவாசமாகவும் நடந்துக்கும். வீட்டுக்கு யாராவது புது ஆட்கள் வந்தா, உடனே தாவுறது, கடிக்க போறதுன்னு எந்த அக்ரசிவ் மூட்லயும் இருக்காது. அப்படியே குரைச்சாலும், 'அமைதியா இரு'ன்னு ஓனர் சொன்னா உடனே ரெஸ்பான்ஸ் பண்ணும். மத்த வகை நாய்களை விட, புத்திசாலியும் கூட.

இதோட டயட் சார்ட் என்ன?

காலையில் கொஞ்சம் பெடிகிரி, 2 முட்டை. மதியம் தயிர் மட்டும் சாப்பிடும். ஈவினிங்ல சிக்கன் ரைசை வெளுத்து கட்டுவார். டெய்லி, மார்னிங், ஈவினிங் வாக்கிங் கூட்டிச் போறதால, எவ்ளோ சாப்பிட்டாலும், ஓவர் வெயிட் போடுறதில்லை. எல்லா க்ளைமேட்டுக்கும் ஈஸியா அடாப்ட் ஆகிடும்.

புதுசா நாய் வளர்ப்பவர்கள், புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், அதோட டைம் ஸ்பென்ட் பண்ணணும்கிறது தான். இல்லாட்டி அது ஸ்ட்ரெஸ் ஆகி அக்ரசிவ்வா மாறிடும். பப்பில இருந்து வளர்க்கும் போது, நம்ம வீடு, சுற்றுச்சூழல ஈஸியா புரிஞ்சிக்கும்.

என்னதான் டாக் லவ்வரா இருந்தாலும், ஓவரா செல்லம் கொடுக்க கூடாது. அப்புறம் அதோட மைண்ட்ல, 'நாம தான் இந்த வீட்டுக்கு ராஜா. இவங்க சொல்றத நம்ம என்ன கேக்கறது' ங்கற எண்ணம் வந்துடும். அதனால் அதை அதட்டவும் செய்யணும், அன்பாகவும் பார்த்துக்கணும்.

வேலை முடிச்சிட்டு, டயர்டா வீட்டுக்குள்ள நுழையும் போது, என்னோட சத்தத்தை கேட்டு, ஓடி வந்து ஹக் பண்ணும் போது, எல்லா ஸ்ட்ரெஸ்-வும் பறந்து ஓடிடும்.

என் தனிமைக்கு துணை ரோஸியும், சிண்டு வு ம்!

''எனக்கு ஒரே பையன். பொண்ணு இல்லாத குறையை, ரோஸி தான் தீர்த்து வைக்கிறா. அவள குளிப்பாட்டி, பொட்டு வச்சி அழகுப்பார்ப்பேன்,'' என்கிறார், கோவை, கார்ந்திபார்கை சேர்ந்த மஞ்சு.

நிறைய வெரைட்டி பெட்ஸ் வளர்க்கும் இவர், நம்மிடம் பகிர்ந்தவை: எனக்கு சின்ன வயசுல இருந்து, பெட்ஸ்னா ரொம்ப புடிக்கும். ரெண்டு முறை, பேர்ட்ஸ் வாங்கியும், பறந்து போயிடுச்சு. அதுக்கு அப்புறம் தான், டாக்ஸ் வாங்குனோம். இப்போ, ஒரு ராட்வீலர், பொமரேனியன் (ரோஸி), ஒரு நாட்டு பூனை (பிளாக்கி), ரெண்டு சன்கனுார் பேர்ட்ஸ் (சிண்டு), ரெண்டு சுகர்கிளேடர்-னு (நானா,நானி), வீடு நிறைய பெட்ஸ் இருக்கு.

இதுல, ரோஸி கேர்ள்ங்கறதால, எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இவளை குளிப்பாட்டி, பொட்டு வச்சி அழகுப்பார்ப்பேன். எப்பவும் என்கூடவே தான் இருப்பா. துாங்கும் போது கூட, என் தலையணை தான் ரோஸிக்கும். பிளாக்கிய கொஞ்சுனா, ரோஸிக்கு கோபம் வந்துடும்.

இதேமாதிரி, பேர்ட்ஸ், சுகர்கிளேடர்ஸ்-னு எல்லாத்துக்கும் நான் தான் புட் கொடுப்பேன். தண்ணீர் வைப்பேன்.

என்னோட குரல் கொஞ்ச நேரம் கேக்கலைன்னா கூட, சிண்டுஸ் கத்த ஆரம்பிச்சிடும். என் கணவர், பையன் ரெண்டு பேரும் வேலைக்கு போறதால, வீட்டுல தனிமையில இருக்கற பீலிங்கே தெரியாம, இவங்க தான் பாத்துக்குறாங்க. இவங்க கூட இருக்கறதால, இப்போ நான் ரொம்ப பிஸி.

உங்க பப்பி சோர்வா இருக்குதா

பப்பிகளுக்கு சில நேரங்களில் உணவு ஒவ்வாமையால் வாந்தி வரலாம். ஆனால், தண்ணீர் குடித்தால் கூட வாந்தி எடுப்பது, நுரையுடன் வாந்தி எடுப்பது, அதிக துர்நாற்றத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், 'பார்வோ' வைரஸ் தாக்குதலாக இருக்கலாம். இந்த வைரஸ், தடுப்பூசி போடாத பப்பிகளையே குறி வைத்து தாக்குகிறது.

குறிப்பாக பப்பிகளுக்கு, 45 நாளில் முதல் தடுப்பூசி போட வேண்டும். இதில், பார்வோ உள்ளிட்ட 7 வைரஸ் தாக்குதலுக்கான மருந்து செலுத்தப்படுகிறது. இதேபோல், முதல் மூன்று தடுப்பூசிகள் போடும் வரை, பப்பிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுதல், தெரியாத நாய்களுடன் பழகவிட கூடாது. ஏனெனில், பார்வோ வைரஸ் தாக்குதலை குணப்படுத்த, நேரடி மருந்துகள் இல்லை. இதன் அறிகுறிகளுக்கு ஏற்ற வகையில், 3-5 நாட்களுக்கு, தொடர்ந்து குளுக்கோஸ் ஏற்றுதல், ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படும். அறிகுறிகள் தீவிரமடையும் பட்சத்தில், பப்பி உயிரிழக்கும், அபாயம் இருப்பதால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம்.

- டாக்டர் எஸ்.அபிலாஷ்,

கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர், கோவை.






      Dinamalar
      Follow us